MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமையிலும் விடுமுறை இல்லை- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமையிலும் விடுமுறை இல்லை- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழக அரசின் வருவாய் பெருக்கத்திற்காக பதிவுத்துறை மார்ச் 2025 மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பதிவு அலுவலகங்களை திறக்க உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாள் பதிவிற்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், ஸ்டார் 2.0 திட்டப்படி இணையவழி பதிவு தடையின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Feb 28 2025, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மார்ச் மாதத்தில் பத்திர பதிவு செய்யும் மக்களுக்கு குட் நியூஸ்  தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

மார்ச் மாதத்தில் பத்திர பதிவு செய்யும் மக்களுக்கு குட் நியூஸ்- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு


தமிழக அரசு பல்வேறு நிதி உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு கொண்டு சேர்க்க பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லையென தமிழக அரசு கூறி வரும் நிலையில்,  

தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு டாஸ்மாக் மற்றும் வணிக வரி மற்றும் பதிவுத்துறை  பணத்தை அள்ளிக்கொடுக்கிறது. அதன் படி நாள் தோறும் மது விற்பனையும், பத்திர பதிவு மூலமாகவும் நிதியானது கொட்டுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பத்திர பதிவு வரி வருவாய்

பத்திர பதிவு வரி வருவாய்

அந்த வகையில்  வணிகவரித் துறையில் 2024-2025 நிதி ஆண்டின் 31.01.2025 வரையில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் 31.01.2025 வரை கூடுதலாக ரூ.12,001 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

மேலும் வருவாய் அதிகரிக்கும் நோக்கிலும், பத்திர பதிவு செய்யவரும் மக்களுக்கு உதவிடும் வகையில் புதிய திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பதிவுத்துறை அரசின் வருவாய் பெருக்கும் நோக்கில் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ளார். 
 

34
அனைத்து சனிக்கிழமையும் இயங்கும்

அனைத்து சனிக்கிழமையும் இயங்கும்

மேலும் பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாய் பெருக்கும் நோக்கிலும் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவு விதி-4-க்கு உட்பட்டு பதிவுச் சட்டம் கீழுள்ள Table of fees om 17(3)-60 abc கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படவேண்டும் என்ற விபரம் கூறப்பட்டுள்ளது.

44
கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவு

கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவு

 
மேலும் அன்றைய தினங்களில், ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான Help Desk மற்றும் Help Line வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட  TCS மென்பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

 பத்திர பதிவு துறை செயல்படுவதை துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதை கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Recommended image2
Now Playing
மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
Recommended image3
Now Playing
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved