- Home
- Tamil Nadu News
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்த சரண் விடுப்பு.! அசத்தலான அறிவிப்பை வெளியிட தேதி குறித்த அரசு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்த சரண் விடுப்பு.! அசத்தலான அறிவிப்பை வெளியிட தேதி குறித்த அரசு
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. ஓய்வூதியம், சரண் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Important announcement for government employees to be released tomorrow அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பாலமாக உள்ளனர். அரசு என்ன தான் திட்டங்கள் வகுத்தாலும் அதில் அரசு ஊழியர்களின் பங்கு முக்கியம் வகிக்கிறது. எனவே அரசு ஊழியர்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்த போதும் பல கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும்,
old pension scheme
அரசு ஊழியர்கள் கோரிக்கைகள்
7-வது ஊதிய குழு நிர்ணயம்செய்த பொழுது 21 மாத நிலுவைத்தொகையினை வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளதை உடனே வழங்கிட வேண்டும். குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைந்து உரிய ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள பல பிரிவு காலிப்பணியிடங்களையும் நிரப்பி, பதவி உயர்வினையும் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள்,
old pension scheme
அரசு ஊழியர்களக்கு சரண் விடுப்பு
பகுதி நேர பணியாளர்கள் அனைவரது எதிர்கால வாழ்வாதாரம் கருதி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது. இதனையடுத்து அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான ஓய்வூதிய திட்டம் மற்றும் சரண் விடுப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு கால நிர்ணயம் செய்யப்பட்டது.
Government Employees Association announces protest
சரண் விடுப்பு - அரசு ஊழியர்கள் போராட்டம்
இதனையடுத்து கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட சரண் விடுப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. இதனையேற்ற தமிழக அரசு தமிழக சட்டமன்றத்தில் சரண் விடுப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது. இதன் படி, 2020ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட சரண்விடுப்பு ஒப்படைப்பினை 01-04-2026 முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு ஊழியர்கள் இந்தாண்டே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
leave concession for government employees
சட்டசபையில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு
இதற்காக பல போராட்டங்களையும் அரசு ஊழியர்கள் மேற்கொண்ட நிலையில், நாளை அல்லது நாளை மறுதினம் அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்புகளை சட்டசபையில் வெளியிட இருப்பதாக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. இதன் படி சரண் விடுப்பபை 01. 04. 25 முதல் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.