நீக்கிய 40 நாட்களில் மீண்டும் தளவாய் சுந்தரம்! எடப்பாடி பின் வாங்கியது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்கள்!
பாஜக பேரணியில் பங்கேற்றதால் அதிமுக பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட தளவாய் சுந்தரம், 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக முக்கிய பிரமுகரும், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான தளவாய் சுந்தரம். அவர் அதிமுக அமைப்பு செயலாளராகவும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமாக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் பாஜகவிற்கு எதிராக அதிமுக செயல்பட்டு வரும் நிலையில், பாஜகவின் மைய அமைப்பான ஆர்எஸ்எஸ் பேரணியை அக்டோபர் 6ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது மட்டுமல்லாமல் தலைமைக்கு புகார் சென்றது.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் நாம யாருன்னு காட்டுவோம்! களமிறங்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி! எந்த தொகுதியில்? பா.ரஞ்சித் பரபர!
இதனையடுத்து கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு முரணான மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். தளவாய்சுந்தரம் தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட தளவாய் சுந்தரத்திற்கு 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே பொறுப்புகள் வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இனி வாய்ப்பே இல்லையாம்!
இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அதுசம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு அக்டோபர் 8-ம் தேதி அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். தளவாய் சுந்தரம் அந்நிகழ்வில் கலந்துகொண்டது தொடர்பாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் மீண்டும் நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.