இனி தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கப்போகுதாம்! பனிமூட்டம் எப்படி இருக்கும்? வானிலை மையம் முக்கிய தகவல்!
வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம், அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.

இனி தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கப்போகுதாம்! பனிமூட்டம் எப்படி இருக்கும்? வானிலை மையம் முக்கிய தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இரவு மற்றும் அதிகாலையில் கடுமையான பனி பொழிவு நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த 4 நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
வெயில் அதிகரிக்கும்
நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
வறண்ட வானிலை
6ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் 7 முதல் 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மிதமான பனிமூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசானது முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32°- 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசானது முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32°- 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.