MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி தான் வெயிலின் ஆட்டம் ஆரம்பம்.! அலர்ட் விடுத்த வானிலை மையம்

இனி தான் வெயிலின் ஆட்டம் ஆரம்பம்.! அலர்ட் விடுத்த வானிலை மையம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒருசில இடங்களில் வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Mar 24 2025, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Tamilnadu heat wave :  தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வீடுகளில் மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது குறையுமா என்பது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மிதமான மழைக்கு வாய்ப்பு

மிதமான மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக இன்று 24-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,   இடி,  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நாளை 25-03-2025 மற்றும் 26-03-2025: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து வருகிற  27-03-2025 முதல் 30-03-2025 வரை:  வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

34
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

அதிகபட்ச  வெப்பநிலை மாறுதலின் போக்கு:  
24-03-2025 மற்றும் 25-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய  மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 
27-03-2025 முதல் 29-03-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக  2 - 3° செல்சியஸ்  உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச  வெப்ப அளவின் வேறுபாடு:  

24-03-2025 மற்றும் 25-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச  வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 26-03-2025 முதல் 28-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச  வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை  விட   2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

44
சென்னை வானிலை நிலவரம்

சென்னை வானிலை நிலவரம்

இன்று (24-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை  35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். நாளை (25-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை  35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
வெப்ப அலை
தமிழ்நாடு வானிலை
கோடைக்காலம்
மழை செய்திகள்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(14.3 ov)84/1
IND need 59 runs in 111 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
Vegetable Kit: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! தீபாவளிக்கு தமிழக அரசு வழங்கும் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ – என்னென்ன காய்கறிகள் கிடைக்கும்?
Recommended image3
Now Playing
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved