- Home
- Tamil Nadu News
- மக்களே உஷார்! கோர முகத்தை காட்டப்போகும் வெயில்! டேஞ்சர் அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!
மக்களே உஷார்! கோர முகத்தை காட்டப்போகும் வெயில்! டேஞ்சர் அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!
தமிழகத்தில் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் நிலவுகிறது. இதனால் மக்கள் பகலில் வெளியே செல்வதைத் தவிர்க்கின்றனர்.

மக்களே உஷார்! கோர முகத்தை காட்டப்போகும் வெயில்! டேஞ்சர் அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் இன்னும் வரும் மாதங்களில் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பனி மற்றும் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை மையம்
அதாவது இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
வறண்ட வானிலை
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
வெப்ப நிலை அதிகரிக்கும்
07ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
பனிமூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.