இனி தப்பிக்க சான்ஸே இல்லை.! டாஸ்மாக் புதிய அறிவிப்பால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மது பிரியர்கள்
Warning to Tasmac shops : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மயமாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மதுபாட்டில்களுக்கு ரசீது கொடுக்க வேண்டும் என்றும், ஸ்கேன் செய்யாமல் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tasmac liquor
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மது விற்பனை
மது விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிதி திட்டங்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் உள்ளது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் வரும் துறையாக டாஸ்மாக் உள்ளது. தமிழகம் முழுவதும் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் கடைகளில் அரசு விதித்த விலையை விட 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.
liquor shops
கூடுதல் பணம் வசூலிப்பு
இதனை கட்டுப்படுத்த பல வகையிலும் நடவடிக்கை எடுத்தாலும் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலை தான் இருந்தது. இந்த நிலையில் தான் டாஸ்மாக் மதுக்கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் படி மதுபாட்டில்களுக்கு கண்டிப்பாக ரசீது கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறுவது தெரியவந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் கணினி மயமாக்கல் திட்டமானது இராமநாதபுரம், அரக்கோணம், காஞ்சிபுரம் (வடக்கு). காஞ்சிபுரம் (தெற்கு), சிவகங்கை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் முழுவதுமாக செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளன.
liquor shops
மதுபாட்டில் விற்பனையில் வித்தியாசம்
கணினி மயமாக்கல் திட்ட நடைமுறைகள் அனைவருக்கும் உரிய முறையில் முழுமையாக பயிற்றுவிக்கப்பட்டும், நடைமுறைபடுத்துதலில் ஏதேனும் சந்தேகம் அல்லது கடைப்பணியாளர்களின் தவறான செயல்பாடுகளால் ஏற்படும் பிழைகளுக்கு அவ்வப்போது தலைமை அலுவலகத்திலுள்ள கணிணி மயமாக்கலின் உதவிமையத்தின் (Help Desk) மூலம் தீர்வுக்கான வழிமுறைகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சில மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும் இடையே அதிக அளவில் விற்பனை வித்தியாசங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்க்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Tasmac shop
கட்டுப்பாடுகள் விதித்த டாஸ்மாக் நிர்வாகம்
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனையின் போது நுகர்வோர் விரும்பி கேட்கும் மதுபானங்களுடன் அதற்குண்டான இரசீதுகள் நுகர்வோர்க்கு கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நுகர்வோர்க்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படும் பொழுது மட்டுமே ஸ்கேன் செய்து விற்கப்பட வேண்டும்.
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் இருப்பிலுள்ள மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு நுகர்வோர்க்கு விற்பனை செய்தல் கூடாது.
liquor shops bill
கடை ஊழியர்களுக்கு அபராதம்
மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும் இடையே ஏற்படும் வேறுபாடு மிகையான விற்பனைதொகையாக இருப்பினும் அதனை கடைப்பணியாளர்கள் விற்பனை செய்யப்படும் போது சரிவர ஸ்கேன் செய்யாமல் விற்பனை செய்ததாகவே கருதப்படும். ஆக மிகையான தொகையென கண்டறியப்படும் தொகையின் மீது 50% அபராதத் தொகை, அபராதத் தொகை மீதான வட்டி @ 24% ஆண்டுக்கு மற்றும் ஜிஎஸ்டி@ 18% என 05/12/2024 முதல் வசூலிக்கப்படும்.
tasmac shop
முன்கூட்டியே மதுபாட்டில்கள் ஸ்கேன்
மேலும் கடைப்பணியாளர்கள் விற்பனை செய்யும் போது ஸ்கேன் செய்யாமல், முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு விற்பனை செய்ததனாலேயே குறைவான தொகை, அசல் விற்பனைத்தொகையை விட குறைவான தொகைக்கு விற்பனை செய்ததாக கருதப்படுகிறது. ஆக குறைவான தொகையென கண்டறியப்படும் தொகையின் மீது 50% அபராதத் தொகை, அபராதத் தொகை மீதான வட்டி @ 24% ஆண்டுக்கு மற்றும் ஜிஎஸ்டி@ 18% என 05/12/2024 முதல் வசூலிக்கப்படும்.
tasmac liquor
துறை ரீதியான நடவடிக்கை
தவறான செயல்பாடுகளை (MIS-APPROPRIATION) கண்காணிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் (கணக்கு) ஆகியோரே இதற்கு முழு பொறுப்பாவார்கள். அவர்களிடம் துறைரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, மேற்கண்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி இனிவரும் காலங்களில் விற்பனை விவரங்கள் அனுப்பவதில் முரண்பாடுகள் நடைபெறாவண்ணம் செயல்பட்டு, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் அனைத்து செயல்பாடுகளும் கணினி மயமாக்கல் திட்டத்தினை தங்களின் மாவட்டங்களில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் முழுமையாக செயல்படுத்திட ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.