MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Holiday: பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை.. மாணவர்கள் குஷி.. எந்தெந்த நாட்கள்? முழு லிஸ்ட்!

School Holiday: பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை.. மாணவர்கள் குஷி.. எந்தெந்த நாட்கள்? முழு லிஸ்ட்!

School Holiday: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி தமிழகத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. எந்தெந்த நாட்கள் விடுமுறை? என விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 11 2026, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை
Image Credit : Pinterest

பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே எப்போதும் குஷி தான். இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கபப்ட்டு சுமார் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன. இதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் மீண்டும் எப்போது விடுமுறை வரும்? என மாணவர்கள் காலாண்டரை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வர உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆயுத பூஜை விடுமுறை
Image Credit : Gemini AI

ஆயுத பூஜை விடுமுறை

அதாவது அக்டோபர் 19 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயதசமி கொண்டாப்படுகிறது. இந்த இரண்டு நாட்களும் பொது விடுமுறையாகும். ஆகவே பள்ளிகளுக்கும் இந்த இரண்டு நாட்களும் விடுமுறையாகும். மேலும் அக்டோபர் 17 ஆம் சனிக்கிழமை, அக்டோபர் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என இரண்டு விடுமுறை நாட்களும் சேர்ந்து இருப்பதால் பள்ளிகளுக்கு மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

34
மாணவர்கள் குஷி
Image Credit : Getty

மாணவர்கள் குஷி

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவ,மாணவிகள் குஷியாகியுள்ளனர். அதுவும் காலாண்டு விடுமுறை முடிந்த அடுத்த சில நாட்களுக்குள் இந்த தொடர் விடுமுறை வருவதால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்த தொடர் விடுமுறை மாணவர்களுக்கு மட்டுமின்றி அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆயுத பூஜை கொண்டாட்டம்

சிலர் ஆயுத பூஜையை வீடுகளில் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில், சிலர் 4 நாட்கள் விடுமுறை வருவதால் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். அதாவது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்கள், தங்களுக்கு பிடித்த கோவில்களுக்கு செல்லவும் முடிவு செய்துள்ளனர். சென்னை, கோவை, பெங்களூரு போன்ற் நகரங்களில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட ரெடியாக உள்ளனர்.

44
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Image Credit : Asianet News

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

4 நாட்கள் விடுமுறை என்பதால் அக்டோபர் 16 ஆம் தேதியே அதாவது வெள்ளிக்கிழமை அன்று மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு விடுவார்கள். இதனால் சென்னை, கோவை, பெங்களூருவில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. மக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை

ரயில்களில் இருக்கைகள் நிரம்பி விட்டதால் இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்துகள் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு பலமடங்கு கட்டணம் நிர்ணயித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்தது 2,000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிகள் விடுமுறை
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Ration Card Update 2026: உங்கள் ரேஷன் கார்டு முடங்குமா? உண்மை நிலவரம் என்ன?
Recommended image2
8TH PAY COMMISSION: மத்திய அரசு ஊழியர்களே ரெடியா? சம்பளம் 3 மடங்கு, பென்ஷன் ரூ.34,470? அதிரடி அப்டேட்.!
Recommended image3
Govt New Scheme: பெண்களுக்கு ரூ.5 கோடி வரை கடன்! வெற்றி மகளிர் திட்டம் 2026 – தகுதி, சொந்த முதலீடு, விண்ணப்பிப்பது எப்படி?
Related Stories
Recommended image1
October Bank Holidays: அக்டோபரில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. இந்த தேதிகளை மறந்துடாதீங்க!
Recommended image2
School Holiday: பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை.. மாணவர்கள் குஷி.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved