Tamilnadu Government: விவசாயிகளுக்கு ரூ.5000 கொடுக்கும் தமிழக அரசு! அட்டகாசமான அறிவிப்பு!
Subsidy For Farmers: விவசாயிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வீட்டிலிருந்தே செல்போன் மூலம் பம்புசெட்டுகளை இயக்கும் கருவிக்கு தமிழக அரசு மானியம் வழங்குகிறது.
நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் விவசாயிகள். இந்தியாவில் 65%க்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தரமான விதைகள் மானியம், உர மானியம் ஆண்டுக்கு 6000 உதவி தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதேபோல், வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியமும், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க இயந்திரங்கள் வாங்கவும் மானியமும் அரசு தருகிறது. விவசாயிளுக்கு இலவச மின்சார இணைப்பு அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் செல்போன் மூலமாக விவசாய பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு அரசு மானியம் தருவதாக சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: November Month School Holiday: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? வெளியான தகவல்!
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில்: விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்கிறார்கள். அப்படி போகும் போது, பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும், நிறுத்தவும் உதவுகிறது.
இதற்காக ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7000, மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5000 வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் 250 பம்பு செட்டுகளுக்கு இந்த கருவி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகைக்கு பழைய பேங்க் அக்கவுண்டை கொடுத்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்!
பழைய மின் மோட்டாரை மாற்றி புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.15,000 மானியமும், தரிசு நிலங்களில் சிறு தானிய சாகுபடிக்கு உழவு மானியமாக அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.5,400 மானியமும் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் திருப்பூர், உடுமலை, தாராபுரம் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.