MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

சென்னை மக்கள் ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற சூப்பர் சான்ஸ் வந்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Feb 11 2026, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற..
Image Credit : Google

ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற..

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதாரமாக உள்ளது. 

ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற அவ்வப்போது முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதாவது பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
மக்கள் குறைதீர் முகாம்
Image Credit : Gemini AI

மக்கள் குறைதீர் முகாம்

அதன்படி பிப்ரவரி 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 14.02.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

Related Articles

Related image1
ரேஷன் கார்டு இருந்தா ரூ.25 லட்சம் கடன்.. தமிழக அரசு தரும் சூப்பர் சலுகை
Related image2
சென்னை மக்களே ரெடியா.. வீடு தேடி வரும் ரேஷன் பொருள்..! தேதி குறித்த தமிழக அரசு.!
33
குறைகள் இருந்தால் உடனடி நடவடிக்கை
Image Credit : DH

குறைகள் இருந்தால் உடனடி நடவடிக்கை

சில நேரங்களில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் சரியாக இல்லை என்றும், எடையும் சரியாக போடப்படுவதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அந்த வகையில் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
குடும்ப அட்டை
ரேஷன் கடை

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Crop Loan Waiver : விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி! தமிழக அரசு அறிவிப்பு! முழு விவரம்!
Recommended image2
Chennai Powercut Update : சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (மே 26) 5 மணி நேரம் மின்தடை
Recommended image3
Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் நாளை முதல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Related Stories
Recommended image1
ரேஷன் கார்டு இருந்தா ரூ.25 லட்சம் கடன்.. தமிழக அரசு தரும் சூப்பர் சலுகை
Recommended image2
சென்னை மக்களே ரெடியா.. வீடு தேடி வரும் ரேஷன் பொருள்..! தேதி குறித்த தமிழக அரசு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved