MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அட! நாளை இத்தனை மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா..! முழு லிஸ்ட் இதோ!

அட! நாளை இத்தனை மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா..! முழு லிஸ்ட் இதோ!

TN School Holidays Dec 3: கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் ஒரு மாவடட்த்தில் பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Rayar r
Published : Dec 02 2025, 10:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : Asianet News

4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் டிட்வா புயல் தாக்கம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதேபோல் சென்னை முழுவதும் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. 

சென்னை உள்பட மேற்கண்ட இந்த 4 மாவட்டங்களிலும் இன்றும் விட்டு விட்டு மழை பெய்தது. நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் நாளை (டிசம்பர் 3) 3 மாட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

24
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம்
Image Credit : Getty

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம்

அதாவது சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இதேபோல் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தர‌விட்டுள்ளனர்.

 திருவள்ளூரில் முதலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பின்பு கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Related image1
மாணவர்களுக்கு குட்நியூஸ்! டிசம்பர் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! என்ன காரணம்?
Related image2
தமிழகத்தில் நாளை 'இந்த' 3 மாவட்டத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு! மாணவர்கள் குஷி!
34
திருவண்ணாமலைக்கும் விடுமுறை
Image Credit : Asianet News

திருவண்ணாமலைக்கும் விடுமுறை

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளுர் விடுமுறைக்கு பதிலாக டிசம்பர் 13ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

44
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
Image Credit : google

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னையில் கனமழை எச்சரிக்கை உள்ளதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (டிசம்பர் 3) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னையை தவிர மற்ற இடங்களில் செம்ஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விடுமுறை
பள்ளிகள்
தமிழ்நாடு
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image2
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Recommended image3
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Related Stories
Recommended image1
மாணவர்களுக்கு குட்நியூஸ்! டிசம்பர் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! என்ன காரணம்?
Recommended image2
தமிழகத்தில் நாளை 'இந்த' 3 மாவட்டத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு! மாணவர்கள் குஷி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved