- Home
- Tamil Nadu News
- தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த ஏரியாவில் பவர் கட்? மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்!
தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த ஏரியாவில் பவர் கட்? மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்!
தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த ஏரியாவில் பவர் கட்? மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்!
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
தமிழகம் முழுவதும் மின்தடை ஏரியாக்கள்
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டம்
வளவனூர் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட மோட்சகுளம் மின்பாதை பகுதியில் உள்ள அற்பிசம்பாளையம், அம்சார்வேலி, சத்திரம், புத்து, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகள் அடங்கும்.
தஞ்சாவூர் மாவட்டம்
மெலட்டூர் பகுதியில் மெலட்டூர், காந்தவனம், அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, எடக்குடி, திட்டை, முருக்கப்குடி மற்றும் சுற்றுவட்டார இடங்கள். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை நகரம் முழுவதும், கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, வழுத்தூர், இளங்கார்குடி, அகரமாங்குடி, வடக்கு மாங்குடி, சூலமங்கலம், பசுபதிகோவில், மாத்தூர், வீரசிங்கம்பேட்டை, நெடார், வயலூர், ராமாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கலில் குமாரபாளையம்நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி.நகர், புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, வளையக்காரனூர், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் மற்றும் காளப்பநாய்க்கன்பட்டி, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி மற்றும் புதன்சந்தை ஆகிய பகுதிகளாகும்.
கோவை மாவட்டம்
கோவையில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆவாரம்பாளையம், கணேஷ்நகர், காமதேனு நகர், நவ இந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன் பாளையம், அலமுநகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, புதியவர் நகர், மின் மயானம், காந்தி மாநகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
சேலம் மாவட்டம்
ஆலங்காட்டானூர், வேலகவுண்டம்பாளையம், அம்மன்கோவில், பாட்டப்பன் கோவில், கத்தாளப்பட்டி, சுப்ரமணியர் கோவில், ஏழமாத்தானூர், காந்திநகர், காடையாம்பட்டி, நடுவனேரி, பெருமாகவுண்டம்பட்டி மேற்கு, சுண்டெலிபெருமாள் கோவில், பாப்பாபட்டி, மெய்யனூர், இடங்கணசாலை, கே.கே.நகர், வாழகுட்டை, தீர்த்தன்வலவு, வீரபாண்டி துணைமின்நிலையத்தில் ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியானூர், சீரகாப்பாடி, சித்தனேரி, வடுகம்பாளையம், மின்னக்கல், அம்மன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் புதன் கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.