MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளுக்கு இத்தனை பொருட்கள் இலவசமா? எப்படி வாங்குவது? எங்கு வாங்குவது?

விவசாயிகளுக்கு இத்தனை பொருட்கள் இலவசமா? எப்படி வாங்குவது? எங்கு வாங்குவது?

தமிழக அரசின் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தைப் பற்றி அறிக. இலவசமாக பயறு, காய்கறி, பழச்செடிகள் தொகுப்புகளைப் பெறுங்கள். உழவன் செயலி அல்லது tnhorticulture.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கவும்.

1 Min read
Author : Suresh Manthiram
Published : Jul 15 2025, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புதிய திட்டத்தின் துவக்கம்: விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் தமிழக அரசு
Image Credit : ANI

புதிய திட்டத்தின் துவக்கம்: விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் தமிழக அரசு

தமிழக அரசு, மக்களின் நலனையும் உழவர்களின் வாழ்வாதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, "ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 04.07.2025 அன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் இத்திட்டம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இலவசத் தொகுப்புகள்: செழிப்பான எதிர்காலத்திற்கான முதலீடு
Image Credit : Asianet News

இலவசத் தொகுப்புகள்: செழிப்பான எதிர்காலத்திற்கான முதலீடு

இத்திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, அவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகை விதைகள் அடங்கிய தொகுப்பு, காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு மற்றும் பழச்செடிகள் தொகுப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளன. இது விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய உதவும்.

35
திருநெல்வேலி மாவட்டத்தின் இலக்கு: வேளாண்மையில் ஒரு புதிய சகாப்தம்
Image Credit : Gemini AI

திருநெல்வேலி மாவட்டத்தின் இலக்கு: வேளாண்மையில் ஒரு புதிய சகாப்தம்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும், பயறு வகை விதைகள் அடங்கிய தொகுப்பு 2000 பயனாளிகளுக்கும், 34,350 காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு மற்றும் 21,150 பழச்செடிகள் தொகுப்புகள் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பரந்த அளவிலான விநியோகம், மாவட்டத்தின் வேளாண்மையை ஒரு புதிய சகாப்தத்திற்கு இட்டுச் செல்லும்.

45
விண்ணப்பிக்கும் முறை: எளிமையான வழிமுறைகள் மூலம் பயன் பெறுங்கள்
Image Credit : Google

விண்ணப்பிக்கும் முறை: எளிமையான வழிமுறைகள் மூலம் பயன் பெறுங்கள்

இத்திட்டத்தின் கீழ் விதைகளைப் பெற்று தங்கள் இல்லங்களில் நடவு செய்ய இடமுள்ளவர்கள் மற்றும் உழவர் பெருமக்கள் அனைவரும் பயன்பெற, உழவன் செயலியிலோ அல்லது [https://tnhorticulture.tn.gov.in](https://tnhorticulture.tn.gov.in) என்ற வலைத்தளம் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம். 

55
 வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்
Image Credit : Google

வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்

மேலும், ஆதார் அல்லது குடும்ப அட்டை நகலுடன் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இத்திட்டம் குறித்த மேலும் தகவல்களை திருநெல்வேலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jason Sanjay Opens Up: அப்பா காத்திருக்கிறார்! தந்தையைப் பற்றி முதன்முதலாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்.!
Recommended image2
Now Playing
சமூக நீதி நாள்: தந்தை பெரியார் உருவப்படத்திற்கு தவெக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை!
Recommended image3
Now Playing
லண்டன் பயணத்தை நிறைவு செய்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் !
Related Stories
Recommended image1
திருநெல்வேலி சென்றால் இந்த 7 உணவுகளை ருசிக்க மறந்துடாதீங்க
Recommended image2
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா: விலை எவ்வளவு தெரியுமா? ஒரு நூற்றாண்டு கால இனிப்புப் பாரம்பரியத்தின் கதை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved