MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Rs 2500 Women Scheme: பெண்களுக்கு ரூ.2,500 உரிமைத்தொகை.. முதலமைச்சர் விஜய் கொடுக்கப்போகும் பரிசு - எப்போது?

Rs 2500 Women Scheme: பெண்களுக்கு ரூ.2,500 உரிமைத்தொகை.. முதலமைச்சர் விஜய் கொடுக்கப்போகும் பரிசு - எப்போது?

Rs 2500 Women Scheme: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்? என்ற கேள்வி தமிழகம் முழுவதும் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்தத் திட்டம் குறித்த புது அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 07 2026, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை
Image Credit : Asianet News

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து மீண்டும் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட ரூ.2,500 உரிமைத் தொகை எப்போது அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மகளிர் உதவித்தொகை திட்டம்
Image Credit : AI

மகளிர் உதவித்தொகை திட்டம்

இந்தத் திட்டம் 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது, தற்போது சுமார் 1.31 கோடி பெண்கள் இதன் பயனாளிகளாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ​​ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவர்களுக்கு உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையை உறுதி செய்துள்ளது. மேலும், 60 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்பத் தலைவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Related Articles

Related image1
Secret Affairs: தகாத உறவுகள் அதிகம் உள்ள நகரங்கள்: தமிழகத்தின் 4 நகரங்களும் லிஸ்டில் இருக்கு
Related image2
Rain Alert: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. குடையை மறக்காதீங்க! வானிலை மையம் வார்னிங்
36
அமைச்சர் ஜெகதீஸ்வரி
Image Credit : Asianet News

அமைச்சர் ஜெகதீஸ்வரி

இதற்கிடையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தற்போது ரூ.1,000 உரிமைத் தொகை தடையின்றி வழங்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான பணிகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் நடைபெறுவதாகவும் கூறினார்.

46
விஜய் தேர்தல் வாக்குறுதி
Image Credit : AI

விஜய் தேர்தல் வாக்குறுதி

அமைச்சர் கூறியதன்படி, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது நீண்ட ஒரு நிர்வாக செயல்முறை என்பதால், முதலமைச்சர் விஜய் சிறிது கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே, திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் விளக்கமளித்தார்.

56
தமிழக அரசு திட்டம்
Image Credit : Asianet News

தமிழக அரசு திட்டம்

இதற்கு முன்பும் அரசு, திட்டத்தை மறுசீரமைப்பதற்கான பணிகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்திருந்தது. அதே நேரத்தில், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை வழக்கம்போல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

66
உரிமைத் தொகை உயர்வு
Image Credit : Asianet News

உரிமைத் தொகை உயர்வு

தற்போது, ​​ரூ.2,500 உரிமைத் தொகை எந்த மாதம் முதல் வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை அரசு அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை. எனவே, திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் அரசின் அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
விஜய் (நடிகர்)
தமிழ்நாடு அரசு
அரசு திட்டம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Job: தமிழகத்திற்கு வந்த ரூ.1000 கோடி முதலீடு! இத்தனை ஆயிரம் பேருக்கு வேலை ரெடி! மாஸ் காட்டும் முதல்வர் விஜய்!
Recommended image2
Now Playing
"விஜய் கூட இன்னும் கூட்டணியே அமையல! ஸ்டாலின் அண்ணன்கிட்ட பேசிட்டேன்! - திருமாவளவன்
Recommended image3
Magalir Urimai Thogai Scheme: மகளிர் உரிமை தொகையை மிஸ் பண்ணிடாதீங்க.! ரூ.2,500 கிடைக்க இதைல்லாம் உடனே செய்யனும்.!
Related Stories
Recommended image1
Secret Affairs: தகாத உறவுகள் அதிகம் உள்ள நகரங்கள்: தமிழகத்தின் 4 நகரங்களும் லிஸ்டில் இருக்கு
Recommended image2
Rain Alert: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. குடையை மறக்காதீங்க! வானிலை மையம் வார்னிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved