அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் குட் நியூஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை
எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஊதிய உயர்வு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தியது, மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு, பெண்களுக்கு இட ஒதுக்கீடு உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள்
திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் இருந்த போது தடா, பொடா போன்ற சட்டங்களை போட்டு ஒரே நாளில், ஒரே கையெழுத்தில் 1,73,000 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததுடன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தும் கொடுமை செய்துவிட்டு, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அதிக நிதி செலவிடபப்டுகிறது என்று கூறி கொச்சைப்படுத்தி கிண்டலடிப்பது எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியின் வாடிக்கையான கபட வேடம் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
old pension scheme
திமுக ஆட்சியில் சலுகைகள்
இந்தநிலையில் திமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கலைஞரின் 19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பில் 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்களை வழங்கி அரசு ஊழியர் ஆசிரியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளார்.
இதனை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நன்றாக அறிவார்கள். அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 1 இலட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர். அரசு ஊழியர்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் படிகள் ஏறி வழக்கு தொடுத்து அவர்கள் போட்ட டிஸ்மிஸ் உத்தரவை இரத்து செய்ய வைத்து அத்தனைபேரையும் மீண்டும் பணியில் சேரவைத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.
old pension scheme
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
1988 வரைகுறைவான சம்பளம் பெற்று வந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக 1989இல் ஊதியங்களை உயர்த்தித் தந்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். இதே போல அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்திய பல திட்டங்களையும்,சலுகைகளையும் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் அதே வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன்களைப் பரிவோடு கவனித்து சலுகைகள் வழங்கி வருகிறார்கள்.
who participated in the strike promotion cut
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த அரசு ஊழியர்கள் நல திட்டங்கள்
முதலமைச்சர் அவர்களால் மகளிர்க்கு மகப்பேறு விடுப்புக் காலம் 9 மாதம் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார்கள். அரசு பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை 40 விழுக்காடாக உயர்த்தியுள்ளார்கள்.பழனிச்சாமி அரசு ஏற்படுத்திவிட்டுபோன கடன்களால் ஏற்பட்ட கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் தடையின்றி நிறைவேற்றிவரும் முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசு உயர்த்திவரும் அகவிலைப்படிகளை அவ்வப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளித்து வருகிறார்கள். என்பதுடன் அடுத்தடுத்து அவர்களுடைய கோரிக்கைகளும் அவர்கள் அனைவரும் மகிழும் வகையில் நிறைவேற்றப்படும்.
old pension scheme
அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்
பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு 'தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில்' நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. சமக்ர சிக்சா அபியான் திட்டத்திற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்காத நிலையிலும், 32,500 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குரிய ஊதியங்களை உரிய நாளில் வழங்கி பாதுகாத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.