இலவசமாக தமிழகம் முழுவதும் பியூட்டிசியன் பயிற்சி -தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு
தமிழக அரசு இலவச அழகுக்கலை பயிற்சி அளிக்கிறது. 10 ஆம் வகுப்பு முடித்த 18 - 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் உண்டு.
வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தமிழக அரசு
தமிழக அரசு சார்பாக மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பையும் உருவாக்கி இளைய தலைமுறையினருக்கு
கை கொடுத்து வருகிறது. அதன் படி காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கிறது. அடுத்ததாக தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வாரந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன் படி பல லட்சம் இளைஞர்களுக்கு தங்களது படிப்பிற்கு தேவையான வேலவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
இலவச அழகுக்கலை பயிற்சி
இதே போல சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்சியும் வழங்கி, கடனுதவியும் வழங்கி வருகிறது. அதன் படி வீட்டு உபயோக பொருட்கள் செய்வதற்கான பயிற்சி, பேக்கரி உணவு பொருட்கள் செய்வதற்கான பயிற்சி, டிஜிட்டர் மார்க்கெட்டிங் தொடர்பான பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் அழகுக்கலைப்பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அறிவிப்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் Groom India Salon & Spa Pvt Ltd இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி என்ன.?
மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி : 10ம் வகுப்பு முதல்
வயது: 18 வயது முதல் 35 வயது வரை.
அழகுக்கலைப் பயிற்சிகள் என்ன.?
1. Beauty Therapy
2. Ladies Hairdressing
3. Makeup
4. Barbering ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பயிற்சி
இந்த அழகுக்கலை பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ்வழங்கப்படும் எனவும், மாத ஊதியமாக 16000 முதல் 20000 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த படிப்பு படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அரசு மானிய வங்கி கடன் உதவி பெற்றுத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த இடங்களே இருப்பதால் உடனடியாக பதிவு செய்யப்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பயிற்சி அளிக்கப்படும் இடங்கள்:
இராயபேட்டை, ஆலப்பாக்கம், பூந்தமல்லி, கொளத்தூர், திருமுல்லைவாயில், கோவை, திருநெல்வேலி, மதுரை, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, கரூர், ஏற்காடு.
தொடர்புக்கு : 8072828762/9025808570