மிக கன மழை எச்சரிக்கை.! சென்னையில் மழை தொடருமா.? வெதர்மேன் அப்டேட் என்ன.?
வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மீண்டும் இன்று இரவு மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது
heavy rain in tamilnadu
வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடங்கியது. அந்த வகையில் சென்னையை கடந்த மாதம் பெய்த கன மழையால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மழையானது தென்மாவட்டங்களை நோக்கி நகர்ந்தது. மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழையானது கொட்டித்தீர்த்து.
இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இதுமேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
Rain
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் வருகிற 17 ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளார். தங்கள் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கும், மாவட்டம் முழுவதையும் தயார்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
tamilnadu rain
மிக கன மழை எச்சரிக்கை
அனைத்து துறைகளும் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவும், இதனால் மிக அதிகமான, கனமழை முதல் மிகக் கனமழை வரை ஏற்படும் எந்தத் தேவையையும் சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடேயே சென்னையில் நேற்று மாலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட வானம், இரவில் இருந்து இடி மின்னலோடு மழை கொட்டி வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து மாநாகராட்சி சார்பாக மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Rain
தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்
மழை நிலவரம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை முழுவதும் நல்ல மழை பதிவாகியுள்ளது. இப்போது பெய்து வரும் மழையானது சுமார் 2 மணி நேரத்திற்கு மாறுபட்ட தீவிரத்துடன் தொடரும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மழைக்கு இடைவேளை ஏற்படலாம். முதலில் தென்சென்னை, ECR, OMR, ஆகிய பகுதிகளில் மழை நிற்கும் எனவும் இதனை தொடர்ந்துமத்திய, வடசென்னை ஆகிய இடங்களில் மழை நின்று விடும் என கூறியுள்ளார். மறுபடியும் இரவில் இருந்து காலை நேரத்தில் நாளை மழை பெய்யும் எனவும், பூண்டி, செம்பரம்பாக்கத்தில் பகுதியில் மழை பெய்யும் என என தெரிவித்துள்ளார்.