தயாரானது 1.50 லட்சம் புதிய ரேஷன் கார்டு.! எப்போ கிடைக்கும்.? பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில் 1.28 லட்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட இருப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ration shop
புதிய ரேஷன் கார்டுகள்
ஏழை மற்றும் எளிய மக்கள் பயன் அடையும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் நியாய விலைக் கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் பங்குகள் என மொத்தமாக 35083 ரேஷன் கடைகள் உள்ளது. இந்தக் கடைகளில் 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகள் மூலமாக 7 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரத்து 572 பயனாளிகள் பயன் பெற்று வருகிறார்கள்.
RATION CARD
மானிய விலையில் உணவு பொருட்கள்
இலவசமாக அரிசி, மானிய விலையில் கோதுமை, சக்கரை, பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை மக்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகை, வெள்ள பாதிப்பு மற்றும் அவசர கால நிவராண உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த உதவிகளை பெற ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே உதவிகளை பெற முடியும். இது மட்டுமில்லாமல் மகளிர் உரிமை தொகை பெறவும் ரேஷன் கார்டு கட்டாயமாகும்.
New Ration Card
புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்
இதனால் பல லட்சம் மக்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தனர். ஒரே நேரத்தில் 3 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணியை தமிழக அரசு மீண்டும் தொடங்கியது. 2.80 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததால் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் சரியான முறையில் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.
New ration card
நேரடியாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்
நேரடியாக வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தினர். குறிப்பாக அரசு சலுகைகளை பெற ஒரே குடும்பத்தில் வசிப்பவர்கள் தனித்தனியாக வசிப்பதாக தவறான சான்றிதழ் மற்றும் தகவல்களை கொடுத்து ரேஷன் கார்டுகளை பெறுவதாக புகார் வந்தது. இதனையடுத்து விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
smart card
1.54 லட்சம் விண்ணப்பங்கள் தயார்
அந்த வகையில் 2லட்சத்து 89ஆயிரத்து 591 பேர் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் தவறான தகவல் கொடுத்த சுமார் ஒரு லட்சத்து 28ஆயிரம் 373 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 500 புதிய ரேஷன் கார்டுகள் வழங்க மின் ஆளுமை முகமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து உரிய பயணாளிகளுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஆயிரத்து 640 விண்ணப்பங்கள் பரிசீனையில் இருப்பதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.