MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! 3% அகவிலைப்படி உயர்வு.? முதல்வர் கையில் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! 3% அகவிலைப்படி உயர்வு.? முதல்வர் கையில் உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது, இது தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படலாம்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Oct 17 2024, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
GOVERNMENT JOB

GOVERNMENT JOB

அரசு பணி - இளைஞர்களின் கனவு

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் படிப்பு முடித்து வேலை தேடி வெளி உலகத்திற்கு வருகிறார்கள். அப்படி வரும் பெரும்பாலோனோரின் எண்ணம் கால் காசாக இருந்தாலும் கவர்மென்ட் காசாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் நீண்ட காலமாக இருக்கிறது. அந்த வகையில் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளம் கிடைத்தாலும் அரசு வேலையில் இணையவே லட்சக்கணக்கானோரின் கனவாக இருக்கும் .

அந்த அளவிற்கு வேலை நிரந்தரம், மாதம் ஒன்றாம் தேதி பிறந்தால் சம்பளம், அரசு விடுமுறை என சந்தோஷமாக வாழலாம் என்பது பலரின் கனவு. அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசு பணியில் இணைய பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளின் மூலம் அவ்வப்போது பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
DA HIKEGOVE

DA HIKEGOVE

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

அந்த வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பணியாளர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தவில்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி வழங்கும் வகையில்  3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

7ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போதைய அடிப்படைச் சம்பளம் மற்றும்  ஒய்வூதியத்தின் 50 சதவீதத்தை விட 3 சதவீத  உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வானது கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

34
government staff

government staff

அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன்பெறுவுள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 9,448.35 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஆண்டு தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதலைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

44
stalin

stalin

தீபாவளிக்கு முன் குட் நியூஸ்

எனவே தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். எனவும் இதனை விரைவாக அறிவிப்பதன் மூலம் அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவிகிம் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில்,

தமிழக அரசும் அகவிலைப்படி அறிவிப்பு தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிக்ககூடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மழை பாதிப்பு நிவாரண பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலையில் நாளை அல்லது நாளை மறுதினம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிடக்கூடும் கூடும் என தலைமை செயலக வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved