MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாஜகவிற்கு குட்பாய் சொன்ன பிரபல தமிழ் நடிகர்; புதிய கட்சிக்கு பல்டி அடித்தவருக்கு ஜாக்பாட்!!

பாஜகவிற்கு குட்பாய் சொன்ன பிரபல தமிழ் நடிகர்; புதிய கட்சிக்கு பல்டி அடித்தவருக்கு ஜாக்பாட்!!

RK Suresh: அரசியலில் நாளுக்கு நாள் அதிரடி நிகழ்வுகள் நடைபெற்று வரும், நிர்வாகிகளும் கட்சி மாறி வருவார்கள். அந்த வகையில் தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் விலகியுள்ளார். 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Dec 05 2024, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamil Nadu Politics

Tamil Nadu Politics

அரசியல் மாற்றங்கள்

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா என்பது கூறுவது போல ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பல்டி அடிக்கும் நிகழ்வுகள் சாதாரணம் ஆகிவிட்டது. அந்த வகையில் அரசியல் கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் வரை கட்சியில் தொடர்வார்கள் உரிய மரியாதை மதிப்பு கிடைக்கவில்லையென்றால் உடனே எதிர்கட்சிக்கு சென்றுவிடுவார்கள். அதன் படி பல மாநிலங்களில் மூத்த அரசியல் தலைவர்கள் சொந்த கட்சியில் இருந்து யாருக்கு எதிராக பல ஆண்டுகள் அரசியல் செய்தார்களோ அந்த கட்சியிலேயே இணைந்து கொள்வார்கள். அப்படி பல சம்பவம் நாடு முழுவதும் நடந்து வருகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
RK Suresh

RK Suresh

பாஐகவில் ஆர்.கே.சுரேஷ்

இந்தநிலையில் தமிழகத்தில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி நடிக்கராக இருப்பவர் ஆர்.கே.சுரேஷ் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். நடித்தும் கலக்கியுள்ளார். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய கட்சியில் இணைந்து தனது அரசியலை தொடங்கிய அவர் சில நாட்களில் பாஜகவில் இணைந்து முக்கிய பொறுப்பை பெற்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பான வழக்கில் சிக்கி பல மாதங்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். இதனால் ஆர்.கே.சுரேஷ் மற்றும் அண்ணாமலையை இணைத்து பல தகவல்கள் வெளியானது. பல ஆயிரம் மோசடி செய்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

35
Arudra Suresh

Arudra Suresh

ஆருத்ராவில் சிக்கிய ஆர் கே சுரேஷ்

போலீசாரின் கைது பயந்து தலைமறைவான ஆர்.கே.சுரேஷ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று சென்னைக்கு திரும்பினார். இதனையடுத்து  போலீசாரின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் பாஜகவில் முக்கியத்துவம் அளிக்காமல் இருந்ததால் ஆர்.கே.சுரேஷ் அதிருப்தி அடைந்தார். இதனால் பாஜகவில் இருந்து விலகலாமா என்ற யோசனையில் இருந்தார். இதனையடுத்து பாஜகவிற்கு தற்போது குட்பாய் சொல்லியுள்ளார். தற்போது இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். 

45
SRM Pachamuthu

SRM Pachamuthu

ஆர்.கே.சுரேஷ்க்கு புதிய பொறுப்பு

இது தொடர்பாக ஆர். கே.சுரேஷ்க்கு பொறுப்பு வழங்கி அக்கட்சி தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் ஆணைக்கிணங்கவும் பரிந்துரையின் பேரிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் (National Organizing Secretary) பொறுப்பிற்கு R.K. சுரேஷ் நியமிக்கப்படுகிறீர்கள். இப்பொறுப்பை ஏற்கும் நீங்கள். பாரிவேந்தர் வழிகாட்டுதலுக்கு இணங்க, நமது கட்சியின் கொள்கைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டுமென தெரிவித்துக்கொண்டு, தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.

55
Arudra scam Suresh

Arudra scam Suresh

கட்டுப்பாடு விதித்த கட்சி

மேலும், இப்பொறுப்பினை ஏற்கவுள்ள தாங்கள், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பொறுப்பாளர்களை நியமிப்பதோடு, அதிகளவில் உறுப்பினர்களையும் சேர்க்கவேண்டும். இச்செயல்பாட்டினை அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்குள் நீங்கள் நிறைவேற்றினால், உங்கள் பதவி நிரந்தரமாகும் என்பதோடு, மூன்று வருடங்களுக்கு உங்கள் பதவி நீட்டிக்கப்படும்  என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பிஜேபி
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
(122.4 ov) 329 & 343/6
AUSAUS
429
Day 4 - Session 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஐயா முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை ! - மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!
Recommended image2
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image3
Now Playing
மின் தட்டுப்பாடு, ₹6,000 கோடி உபகரணங்கள் வீணடிப்பு: TVK அரசை கடுமையாக தாக்கிய மு.க.ஸ்டாலின்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved