அப்பாடா ஒரு வழியாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைச்சாச்சு- மீண்டும் அமைச்சராகிறார்
அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த அமலாக்கத்துறை
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில், திமுக அரசுக்கு செக் வைக்க களம் இறங்கியது அமலாக்கத்துறை, அதிமுக ஆட்சி காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது பல வருடங்களாக நடைபெற்ற நிலையில், சுமார் 10 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கை கையில் எடுத்தது அமலாக்கத்துறை. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.
ஒரு வருடமாக சிறையில் செந்தில் பாலாஜி
ஒரு வருடமாக சிறையில் செந்தில் பாலாஜி
இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்த நிலையில் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இருதயத்தில் பிரச்சனை இருப்பது தெரியவந்ததையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தனது மீது சுமத்தப்பட்ட வழக்கு போலியானது என கூறிய செந்தில் பாலாஜி இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என பல முறை நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆனால் அமலாக்கத்துறையின் எதிர்ப்பு காரணமாக செந்தில் பாலாஜிக்கு கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் தவித்து வந்தார். இந்த கால கட்டத்தில் அமைச்சர் பதவி இருப்பதால் சாட்சியங்களை கலைக்க கூடும் என அமலாக்கத்துறைக்கு வாதிட்டது.
ஜாமின் வழக்கு விசாரணை
ஜாமின் வழக்கு விசாரணை
எனவே இந்த வாய்ப்பும் அமலாக்கத்துறைக்கு கொடுக்க கூடாது என உடனடியாக அமைச்சர் பதவியையும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். இந்தநிலையில் செந்தில் பாலாஜியோடு கைது செய்யப்பட்ட மற்ற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஒன்றன் பின் ஒன்றாக உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனால் தனக்கும் ஜாமின் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டார்.
செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு உச்ச நீதிபதி நீதிபதி அபய் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு மனுவை விசாரித்து வந்தது. கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. இதனையடுத்து மனு மீதான விசாரணையை நிறைவு செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளி வைத்தது.
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்தநிலையில் இன்று காலை நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அதில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் காரணமாக சுமார் 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருகிறார். இந்தநிலையில் செந்தில் பாலாஜிக்கான நிபந்தனைகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும். 25 லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணை தொகையை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லையென நீதிபதி தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். எனவே இன்று மாலை சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருகிறார். இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெறவுள்ள தமிழக அமைச்சரவை மாற்றத்தில் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.