MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாதம் ரூ.2ஆயிரம் உதவித்தொகை.! மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

மாதம் ரூ.2ஆயிரம் உதவித்தொகை.! மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : May 29 2025, 07:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு
Image Credit : our own

தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவி தொகை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன் நடத்தப்படும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மாதம் 2ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
Image Credit : our own

மாதம் 2ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ் முதுகலைப் பட்ட மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது. இப்பட்ட வகுப்பில் சேர்க்கைப்பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000/- கல்வி உதவித் தொகை திங்கள்தோறும் வழங்கப்படும்.

34
கட்டணில்லா விடுதி வசதி
Image Credit : our own

கட்டணில்லா விடுதி வசதி

மேற்கண்ட படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி உள்ளது. விடுதியில் உள்ள ஒழிவிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

44
விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு
Image Credit : our own

விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் (அ) அஞ்சலில் இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 27.06.2025 வெள்ளிக்கிழமைக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கல்வி
கல்லூரி
உதவித்தொகை
தமிழ்நாடு அரசு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை & எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்: வைகோ காட்டம்!
Recommended image2
Now Playing
ஒரு நிலையற்ற ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
Recommended image3
Now Playing
பணப்பெட்டியும் வாக்குப்பெட்டியும் இருக்கும் வரை நேர்மையான ஆட்சி சாத்தியமில்லை ! சீமான் அதிரடி
Related Stories
Recommended image1
School Education Department: இனி பள்ளிகளில் இவர்களை அனுமதிக்க கூடாது! அதுமட்டுமல்ல! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
Recommended image2
College Student: குட் நியூஸ்! மாணவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved