கழிவறையில் அலறி கூச்சலிட்ட பெண் போலீஸ்! வசமாக சிக்கிய எஸ்எஸ்ஐ! நடந்தது என்ன?
பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் பயன்படுத்திய கழிவறையில், செல்போன் மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பரமக்குடி நகர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ போலீசார் கைது செய்தனர்.

பெண் காவலர் பாதுகாப்பு பணி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்காக திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் மணி நகர் பகுதியில் உள்ள புறநகர் காவல் சோதனைச் சாவடியில் பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கழிவறையில் செல்போன்
அப்போது அங்கு, பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வாகன ரோந்து பிரிவில் பணியாற்றும் எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டி (58) பணியில் இருந்துள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் சோதனைச்சாவடி மையத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வந்துள்ளனர். மூன்று பெண் போலீசார் கழிவறைக்கு சென்று வந்த நிலையில், நான்காவதாக சென்றவர் வாஷ்பேஸின் கீழ் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் கருப்பு கலரில் ஒரு கவர் இருந்துள்ளது.
பரமக்குடி நகர் காவல் நிலையம்
இதனால் சந்தேகமடைந்த பெண் காவலர் அதை எடுத்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனில் வீடியோ பதிவாகி கொண்டிருந்தது. இதுதொடர்பாக அந்த செல்போனை எடுத்து பாதுகாப்பு உயர் அதிகாரியிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த செல்போன் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது.
எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டியன் கைது
பின்னர் செல்போனை ஆய்வு செய்தபோது, அது பரமக்குடி எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டியின் செல்போன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். கைதான முத்துப்பாண்டி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியதை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

