MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தொடர் 4 நாட்கள் விடுமுறை.! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பு வெளியிட்ட தெற்கு ரயில்வே

தொடர் 4 நாட்கள் விடுமுறை.! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பு வெளியிட்ட தெற்கு ரயில்வே

தொடர் விடுமுறையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே தாம்பரம் - கன்னியாகுமரி, தாம்பரம் - திருச்சிராப்பள்ளி இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. ரம்ஜான் பண்டிகை மற்றும் வங்கி கணக்கு முடிவு நாளுக்கான விடுமுறையை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Mar 23 2025, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

 Ramzan Festival Holiday : விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து கூடுதல் விடுமுறை வந்தால் கேட்கவா வேண்டும் மக்களுக்கு சந்தோஷம் தான். அந்த வகையில் வருகிற மார்ச் 29,30, 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் குளுமையான இடங்களுக்கு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தொடர் 4 நாட்கள் விடுமுறை

தொடர் 4 நாட்கள் விடுமுறை

அதன் படி வருகிற மார்ச் 29,30 ஆகிய வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்த்து மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வரவுள்ளது. 
இதனையடுத்து ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி வருட கணக்கு முடிவு நாளாகும் அன்றைய தினமும் அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 

35
சிறப்பு ரயில் அறிவிப்பு

சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்த நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கும் ரம்ஜான் பண்டிகையையொட்டி  சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது.  இந்த சிறப்பு ரயில் வருகின்ற 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படுகிறது.  

இதே போல கன்னியாகுமரியில் இருந்து மார்ச் 31ஆம் தேதி காலை 8. 55 மணிக்கு புறப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் 14 முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், இரண்டு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரியை சென்று சேருகிறது.

45
திருச்சிக்கு சிறப்பு ரயில்

திருச்சிக்கு சிறப்பு ரயில்

இதே போல தாம்பரத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கும்,  திருச்சிராப்பள்ளியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலானது மார்ச் 29 மற்றும் 31ஆம் தேதியில் திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படுகிறது.

இதே போல தாம்பரத்திலிருந்து 29 ஆம் தேதியும் மார்ச் 31ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இரண்டும், 10 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 6 பொது பெட்டியும் இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
பெங்களூருக்கு சிறப்பு ரயில்

பெங்களூருக்கு சிறப்பு ரயில்

இந்த சிறப்புரயிலானது திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக தாம்பரத்தை வந்தடைகிறது.  இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்க உள்ளது. இதே போல பெங்களூரில் இருந்து சென்னை சென்றதும் சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலானது மார்ச் 28ஆம் தேதி பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறது அன்றைய தினமே சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு சென்று சேருகிறது இந்த ரயில் பெங்களூர் ஜோலார்பேட்டை காட்பாடி பெரம்பலூர் வழியாக சென்னை சென்ட்ரலில் வந்தடைகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
ரயில்
கோடை விடுமுறை சிறப்பு ரயில்
திருவிழாக்கள்
தொடர்வண்டிப் போக்குவரத்து
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved