- Home
- Tamil Nadu News
- 9 நவகிரக திருத்தலங்களுக்கு சிறப்பு தரிசன சுற்றுலா.! இவ்வளவு தான் கட்டணமா.? பக்தர்களுக்கு குட் நியூஸ்
9 நவகிரக திருத்தலங்களுக்கு சிறப்பு தரிசன சுற்றுலா.! இவ்வளவு தான் கட்டணமா.? பக்தர்களுக்கு குட் நியூஸ்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 9 நவகிரக திருத்தலங்களுக்கு சிறப்பு தரிசன சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. குறைந்த கட்டணத்தில் வசதியான பயணத்தை வழங்குகிறது.

தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா
தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆன்மிக தலங்களுக்கு வசதியாகவும், மலிவு விலையிலும் பயணிக்க உதவுகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் ஆன்மிக தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவைகளை TNSTC வழங்குகிறது. :ஆன்மிக சுற்றுலா பயணங்களுக்கு வசதியான பேருந்துகள், ஏசி பேருந்துகள் மற்றும் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து துறை சுற்றுலா திட்டங்கள்
மேலும் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒரு நாள் சுற்றுலா திட்டமும் செயல்படுத்தி வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற பலவேறு இடங்களுக்கு ஆன்மிக தரிசனத்திற்கு அழைத்து செல்லப்படுகிறது. இதே போல அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, போக்குவரத்து துறை சார்பில் சுற்றுலா திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் திருப்பதி சுற்றுலா, மாமல்லபுரம் சுற்றுலா, திருவண்ணாமலை சுற்றுலா என பல திட்டங்கள் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் 9 நவகிரக திருத்தலங்களில் சிறப்பு தரிசனம் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
நவகிரக சுற்றுலா கட்டணம்
இதன் படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில், 9 நவகிரக திருத்தலங்களில் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தை சுற்றியுள்ள 9 நவக்கிரக பரிகார திருத்தலங்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய குறைந்த கட்டணத்தில் பக்தர்களுக்கான பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காலை காலை 5.00 மணி கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணி கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடையும்,
பேருந்து வகைகள்
Non A/C - . 750/-
A/C -ரூ.1,350/- (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும்)
நவகிரக திருத்தல சுற்றுலா
சிறப்பம்சம்
அரசு வழிகாட்டி சேவை | கோவில்களின் வரலாறு அறிவிப்பு
வாட்ஸ்அப்பில் வீடியோ வழிகாட்டி (பிற மொழி பக்தர்களுக்காக)
சிறப்பு தரிசன அடையாள அட்டை.
நவகிரக திருத்தலங்கள்
சந்திரன் பரிகார ஸ்தலம் திங்களூர்
குருபகவான் பரிகார ஸ்தலம் ஆலங்குடி
ராகு ஸ்தலம் -திருநாகேஸ்வரம்
சூரிய பகவான் சூரியனார் கோவில்
சுக்கிர பகவான் - கஞ்சனூர்
செவ்வாய் பரிகாரம் ஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில்
புதன் ஸ்தலம் -திருவெண்காடு
கேது ஸ்தலம் - கீழப்பெரும்பள்ளம்
சனி பகவான் - திருநள்ளாறு
முன்பதிவு செய்ய- www.tnstc.in
பிப்ரவரி 2024 முதல் ஜூன் 2025 வரை 30,606 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
தொடர்புக்கு: 94432 63988, 94897 95509