MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் 3 நாள் தொடர் விடுமுறை: பொதுமக்களுக்கு அசத்தலான தகவலை வெளியிட்ட போக்குவரத்து கழகம்

தமிழகத்தில் 3 நாள் தொடர் விடுமுறை: பொதுமக்களுக்கு அசத்தலான தகவலை வெளியிட்ட போக்குவரத்து கழகம்

தொடர் விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை, கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 03 2025, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

தொடர் விடுமுறை, முகூர்த்தம், மீலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 03/09/2025 (புதன்கிழமை) 04/09/2025 (வியாழக்கிழமை முகூர்த்தம்), 05/09/2025 (வெள்ளிக்கிழமை மீலாடி நபி) மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 06/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
Image Credit : our own

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், 

கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 360 பேருந்துகளும், 04/09/2025 (வியாழக்கிழமை) அன்று 710 பேருந்துகளும், 05/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 405 பேருந்துகளும் மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
கோவை மக்களுக்கு குட்நியூஸ்! மெட்ரோ ரயில் முதலில் எந்த ரூட்டில் ஓடப்போகுது? புது அப்டேட்!
Related image2
மக்களே இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்கா! வெயிட் அண்ட் சீ!
34
Image Credit : our own

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 80 பேருந்துகளும், 04/09/2025 (வியாழக்கிழமை) மற்றும் 05/09/2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் 105 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 03/09/2025 மற்றும் 04/09/2025 ஆகிய நாட்களில் 25 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

44
Image Credit : our own

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 03/09/2025 அன்று 17,632 பயணிகளும், 04/09/2025 அன்று 23,032 பயணிகளும் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,271 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7,317 பயணிகளும் ஞாயிறு அன்று 20,740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். 

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பேருந்து
அரசு பேருந்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
கோவை மக்களுக்கு குட்நியூஸ்! மெட்ரோ ரயில் முதலில் எந்த ரூட்டில் ஓடப்போகுது? புது அப்டேட்!
Recommended image2
மக்களே இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்கா! வெயிட் அண்ட் சீ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved