MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Monsoon 2026: மே 26-ல் கேரளாவுக்கு வரும் தென்மேற்குப் பருவமழை.! தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு.!

Monsoon 2026: மே 26-ல் கேரளாவுக்கு வரும் தென்மேற்குப் பருவமழை.! தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு.!

இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 26-ம் தேதி தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கும். இது தமிழகத்திற்கு மழையை பெற்று தரும் எனவும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 16 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 தென்மேற்குப் பருவமழை தேனி பக்கம் வீசும் மழை சாரல்.! சாரல்.!
Image Credit : Asianet News

தென்மேற்குப் பருவமழை தேனி பக்கம் வீசும் மழை சாரல்.! சாரல்.!

வெயிலில் வாடும் மக்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு நல்ல செய்தி சொல்லியுள்ளது. மே 26-ம் தேதி தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நுழையும் என அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், பருவமழை தெற்கு வங்காள விரிகுடா, அந்தமான் கடல் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளை நோக்கி முன்னேற சாதகமான சூழல் உள்ளதாகவும் கூறியுள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
வறட்சி மற்றும் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு
Image Credit : Asianet News

வறட்சி மற்றும் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு

இந்த முறை பருவமழையில் சில சிக்கல்கள் இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, எல் நினோ பாதிப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதனால், பருவமழை தொடங்கிய பிறகு நல்ல மழை பெய்தாலும், எல் நினோ காரணமாக வறட்சி மற்றும் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு போன்ற சூழல்கள் உருவாகும் என எச்சரித்துள்ளது.

Related Articles

Related image1
Monsoon Skincare : மழைக்காலத்துல இந்த அஞ்சுல 1 ஃபேஸ் பேக் போட்டா போதும்!! அழகு குறையவே குறையாது
Related image2
Monsoon : மழைக்காலத்துல ஜன்னல், கதவுகளை திறக்க முடியலையா? இதை செஞ்சா உடனே சரியாகிடும்
36
மழையே மழையே வா வா
Image Credit : Asianet News

மழையே மழையே வா வா

பருவமழை வருகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், வடமேற்கு மற்றும் மத்திய இந்திய மக்களுக்கு இப்போதைக்கு வெயிலில் இருந்து தப்ப வழியில்லை. இந்த வாரம் முழுவதும் அங்கு தீவிர முதல் மிகத் தீவிர அனல் காற்று வீசும். இதனால், வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மழைக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது.
46
போட் பன்னி வச்சுக்கோங்க
Image Credit : Asianet News

போட் பன்னி வச்சுக்கோங்க

இந்தியாவின் முக்கிய நிலப்பரப்பில் தென்மேற்குப் பருவமழை நுழைவதையே கேரளாவில் பருவமழை தொடங்குவதாகக் கூறுகிறோம். இது கோடையின் கடும் வெயிலில் இருந்து மழைக்காலத்திற்கு மாறும் முக்கிய அறிகுறியாகும். பருவமழை வடக்கு நோக்கி நகர நகர, நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்கு வெயிலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். IMD-யின்படி, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி வாக்கில் கேரளாவில் பருவமழை தொடங்கும். இதில் சுமார் ஏழு நாட்கள் வரை வித்தியாசம் ஏற்படுவது இயல்பானது.
56
நல்லா தெரிஞ்சுகிட்டு சொல்லுங்க
Image Credit : Getty

நல்லா தெரிஞ்சுகிட்டு சொல்லுங்க

கேரளாவில் பருவமழை எப்போது தொடங்கும் என்பதை IMD 2005-ம் ஆண்டு முதல் கணித்து வருகிறது. இதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு ஸ்டாட்டிஸ்டிகல் மாடலை பயன்படுத்துகிறது. இதில் நான்கு நாட்கள் வரை வித்தியாசம் இருக்கலாம். இந்த மாடல், வடமேற்கு இந்தியாவின் குறைந்தபட்ச வெப்பநிலை, தென்னிந்தியாவின் பருவமழைக்கு முந்தைய மழை, தென் சீனக் கடல் மீதான கதிர்வீச்சு உட்பட மொத்தம் ஆறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கிறது.
66
அடடா அடடா அடை மழைடா
Image Credit : Getty

அடடா அடடா அடை மழைடா

கேரளாவில் மழை தொடங்கிய பிறகு தமிழகத்திலும் எல் - லினோ காரணமாக தமிழகத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 2005 முதல் 2025 வரையிலான 21 ஆண்டுகளில், 2015-ம் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் IMD-யின் கணிப்புகள் பெரும்பாலும் துல்லியமாகவே இருந்துள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் (2020-2025) கூட, வானிலை ஆய்வு மையம் கூறிய தேதிக்கு அருகிலேயே பருவமழை வந்துள்ளது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
மழை செய்திகள்
வானிலை
வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rs 1000 Scheme : ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. பதிவு செய்வது எப்படி? முழு விபரம் உள்ளே
Recommended image2
ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!
Recommended image3
Radhan Pandit : இப்போ முதல்வர்.. அடுத்து பிரதமர்.. ரஷ்யா பிரச்சினையை விஜய் தீர்த்து வைப்பார்.. ஜோதிடர் பேச்சு
Related Stories
Recommended image1
Monsoon Skincare : மழைக்காலத்துல இந்த அஞ்சுல 1 ஃபேஸ் பேக் போட்டா போதும்!! அழகு குறையவே குறையாது
Recommended image2
Monsoon : மழைக்காலத்துல ஜன்னல், கதவுகளை திறக்க முடியலையா? இதை செஞ்சா உடனே சரியாகிடும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved