எந்தெந்த இடங்கள் ஹாட் ஸ்பாட்! கொங்கு பெல்டில் மழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்!
Tamilnadu Weatherman: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் கொங்கு பெல்ட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இன்று முதல் நாளை பரவலாக மழை பெய்யும். கொங்கு மேற்கு, தெற்கு உள்பகுதி மற்றும் வடக்கு உள்பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி என தென் தமிழகம் அனைத்திலும் கனமழை பெய்யும். தற்போது வீசும் காற்றால் பெங்களூரு மீண்டும் மழைக்கான ஹாட் ஸ்பாட்டில் உள்ளது. இன்னும் ஒரு நாள் பெங்களூருவில் நல்ல மழை பெய்யும். அதன்பின் அக்டோபர் 25 முதல் பெங்களூர் மழைக்கு நீண்ட இடைவேளை விடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.