அஜித்தை காரி துப்பிய சீமான்..! பழைய வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் தல ரசிகர்கள்
NTK Seeman : நடிகர் அஜித்தின் ரசிகர்களை திட்டி பழைய பேட்டி ஒன்றில் சீமான் பேசி இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது மீண்டும் வைரலாக்கி அவரை சாடி வருகின்றனர் தல ரசிகர்கள்.

Seeman Old Video Viral
விஜய்யின் அரசியல் வருகைக்கு பின்னர் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. விஜய்யின் வருகையால் கடும் அப்செட்டில் இருக்கும் அரசியல் தலைவர்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒருவர். அவர் செல்லும் இடமெல்லாம் விஜய்யையும் தவெக-வினரையும் தாக்கி பேசி வருகிறார். அந்த வகையில் அண்மையில் விஜய், திருச்சிக்கு வந்திருந்தபோது அவரைக் காண லட்சக் கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்ததைப் பற்றி சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அஜித் வந்தால் இதைவிட அதிக கூட்டம் வந்திருக்கும் என கூறி இருந்தார்.
விஜய்யை சாடிய சீமான்
அதுமட்டுமின்றி, உன்னை யார் அரசியலுக்கு வரச் சொன்னது என கேள்வி எழுப்பிய சீமான், எம்ஜிஆரைப் போல ஆகிவிடலாம் என நினைக்க வேண்டாம். அவர் ஒன்றரை மணி நேரம் கூட எழுதி வைத்ததை பார்க்காமல் பேசுவார். அதேபோல் விஜயகாந்த் மனதில் பட்டதை மக்கள் மொழியில் பேசுவார். ஸ்டாலின் கூட சின்ன பேப்பரை வைத்து தான் படிப்பார். ஆனால் விஜய் பெரிய பேப்பரில் எழுதிக் கொண்டு வந்து, அதை மக்கள் முன்னிலையில், ஒப்பிக்கிறார் என்று சாடிய சீமான், அஜித்தும், ரஜினிகாந்தும் தங்களுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை என புகழ்ந்து பேசினார்.
வைரலாகும் பழைய வீடியோ
இப்படி விஜய்யை மட்டம்தட்டி பேசும்போதெல்லாம், அஜித்தை உயர்த்தி பேசி வரும் சீமான், பழைய மேடைப் பேச்சு ஒன்றில் அஜித் ரசிகர்களை காரி துப்பி இருக்கிறார். அதில் அவர் பேசியதாவது : “சில தருதலைகள் அஜித்தை தல.... தலனு சொல்லிக்கிட்டு இருக்கான். வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு சுவரொட்டியை பார்த்தேன். அதில் கடவுளே வா... காத்திருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம் என போட்டிருக்கிறான். நாங்கெல்லாம் அதை கூட்டி பெருக்கி முறவாசல் செய்யவா உக்காந்திருக்கோமாடா நாய். அயோக்கிய பயலுகளா, இவனுங்களையெல்லாம் ஏறி மிதிக்க ஒரு ஆள் இல்லாம, ஆளாளுக்கு பேசிகிட்டு திரியுறான். இவங்கள பூட்டி வச்சு கொளுத்திடனும்” என சரமாரியாக சாடி பேசி இருக்கிறார்.
சீமானை வறுத்தெடுக்கும் அஜித் ரசிகர்கள்
அஜித் ரசிகர்களை தாக்கி சீமான் பேசிய வீடியோவை விஜய் ரசிகர்கள் தற்போது மீண்டும் வைரலாக்கி வருகிறார்கள். இதைப்பார்த்த நெட்டிசன்கள், சீமானும், அவரின் தம்பிகளும் வாய் வைக்காத இடமேயில்லை. இணையத்தை கடைந்தெடுத்தால் நொடிக்கொன்றாய் சிக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் தன்னை கண்டுகொள்வதில்லை என்பது தாங்க முடியாமல் தான் சீமான் இப்படி பேசிக் கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். உனக்கு அவ்வளவு தான் லிமிட்டு என அஜித் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
அஜித் பேன்ஸலாம் திட்டி வச்சிருக்கான் 😂😂 pic.twitter.com/TsRMZM7X8J
— Mʀ.Exᴘɪʀʏ (@Jana_Naayagan) September 15, 2025