TN School Reopen Date: 1 முதல் 12ஆம் வகுப்பு வரை எப்போது பள்ளிகள் திறப்பு.? தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை
தமிழக்த்தில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவடைந்தையடுத்து ஏப்ரல் மாதம் மத்தியில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கும், குடும்பத்தோடு சுற்றுலாவும் சென்றனர். மேலும் சிறப்பு கோச்சிங் வகுப்புகளிலும் பங்கேற்றுள்ளனர்.
பள்ளி தேர்வு முடிவுகள் வெளியீடு
மேலும் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதியும் 10ஆம் தேதியும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வியானது பெற்றோர் மத்தியில் எழுந்தது. ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதால் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
புதிய கல்வி ஆண்டு தொடக்கம்
இந்தநிலையில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஜூன் 6ஆம் தேதி பள்ளி திறப்பு
மேலும் குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.