MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு குட்நியூஸ்! நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாணவர்களுக்கு குட்நியூஸ்! நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டத்திற்கு என்பதை பார்ப்போம்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 12 2025, 08:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Chidambaram Temple

Chidambaram Temple

உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாளை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! அடுத்த 12 நாட்கள் லீவே இல்லை! தொடர்ந்து ஸ்கூல் தான்!

25
School Holiday

School Holiday

அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தருவார்கள். ஆகையால் அன்றைய தினம் கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. 

35
Cuddalore

Cuddalore

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 01-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: செம ஹேப்பியில் பள்ளி மாணவர்கள்! இந்த மாவட்டங்களுக்கு 8 நாட்கள் பொங்கல் விடுமுறை!

45
ramanathapuram

ramanathapuram

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு 2025ம் ஆண்டு நாளை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25ம்  சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் செயல்படும். 

55
Pongal Holidays

Pongal Holidays

ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறை மொத்தம் 8 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved