MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தம்பி தம்பி சொல்லிட்டு விஜய்யை சீமான் திடீரென பொளப்பது ஏன்.? உண்மையைப் போட்டு உடைத்த சாட்டை துரைமுருகன்

தம்பி தம்பி சொல்லிட்டு விஜய்யை சீமான் திடீரென பொளப்பது ஏன்.? உண்மையைப் போட்டு உடைத்த சாட்டை துரைமுருகன்

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், சீமானுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் தனது அரசியல் மாநாட்டில் சீமானை மறைமுகமாக விமர்சித்ததால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சீமான், விஜய்யை மோசமாக விமர்சித்து வருகிறார்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Nov 03 2024, 09:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழக அரசியல் களத்தில் சீமான்

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், திரைத்துறையில் கலக்கி வரும் விஜய் ஒரு படத்திற்கு 100 கோடிக்கும் மேல் சம்பளமாக பெற்று வருகிறார். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டி உறுதி என அறிவித்தார். இதனையடுத்து தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டவர் தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் வெளியிட்டார். இதற்கிடையே சீமானும் விஜய்யும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கப்போகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சீமான்- விஜய் கூட்டணி.?

விஜய்க்கு சீமான் தான் அரசியல் தொடர்பாக அறிவுரை கூறி வருகிறார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியானது.  இதற்கு ஏற்றார் போல் சீமானும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தது மட்டுமில்லை தம்பி, தம்பி என அழைத்து வந்தார். எனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் சீமான்- விஜய் கூட்டணி அமைவது உறுதி என பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் பேசிய விஜய் தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் தொடர்பாக தனது கொள்கையை அறிவித்தார். மேலும் சீமான் தொடர்பாகவும் மறைமுகமாக விமர்சித்தார். இதனால் அதிருப்தி அடைந்த சீமான், தங்களுக்கும் விஜய்க்கும் செட் ஆகாது. அவர் வழி வேற, எனது வழி வேறு என அறிவித்திருந்தார்.

35

மோதலில் விஜய்- சீமான்

மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் விஜய்யை மோசமாக விமர்சனம் செய்தார். திராவிடமும், தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும்? சாலையில் ஒன்று அந்த பக்கம் நிற்க வேண்டும். அல்லது இந்த பக்கம் நிற்க வேண்டும் நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் தம்பி. அவர்கள் கூறியது கொள்கை அல்ல, கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை என கூறினார்.

45

சீமான் விமர்சிக்க காரணம் என்ன.?

இதனால் தமிழக வெற்றிக்கழகம் - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென சீமான் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை விமர்சிப்பது தொடர்பான தகவலை சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதில் தான் ஆசையாய் வளர்த்த பிள்ளை காணாமல் போகிறது அதனால் குடும்பத்திற்குள் குழப்பம் வருகிறது 20 ஆண்டுகள் கழித்து காணாமல் போன மகன் கிடைக்கிறான் மகிழ்ச்சியில் குடும்பமே கொண்டாடுகிறது 
 

55
vijay

vijay

விஜய்யை பொளக்க இது தான் காரணம்

ஆனால் வந்தவன் ஆளே மாறி வந்திருக்கிறான் என்பது போகப் போகப் தெரிகிறது அவனை இயக்குகிறவன் தவறான கதைகளை சொல்லி தன் குடும்பத்திற்கு எதிராகவே அவனை வளர்த்துள்ளான் என்பது அப்பாவிற்கு தெரியவர அப்பா அவனை போட்டுத் தள்ளுகிறார் !நடிகர் விஜய்யின் GoAt படத்தில் தன் மகனை தவறானவன் என தெரிந்தவுடன் விஜய் எப்படி பொளந்தாரோ அப்படித்தான் நிஜத்தில் தம்பியாக நினைத்தவர் தவறான அரசியலை கையிலெடுத்தவுடன் அண்ணன் சீமானும் பொளக்கிறார் ! That’s all bro ! என சாட்டை துரைமுருகன் பதிவிட்டுள்ளார். 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அரசியல்
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
சீமான்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved