- Home
- Tamil Nadu News
- அதிகாலையிலேயே பதறிய தமிழகம்.. பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! யார் இந்த அழகுராஜா?
அதிகாலையிலேயே பதறிய தமிழகம்.. பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! யார் இந்த அழகுராஜா?
மதுரை ரவுடி வெள்ளைகாளி மீது நடந்த தாக்குதல் வழக்கில், கைது செய்யப்பட்ட அழகுராஜா என்பவர் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுதங்களை மீட்க அழைத்துச் சென்றபோது, போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வெள்ளைகாளி. இவர் மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கு ஒன்றில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளைகாளியை ஆஜர்படுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பின்தொடர்ந்து இரண்டு கார்களில் ரவுடி கும்பல் வந்துள்ளது.
இந்நிலையில், போலீசார் பெரம்பலூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை பகுதியில், சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த கும்பல் வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில், ரவுடி வெள்ளைக்காளி உயிர் தப்பியதை அறிந்த கும்பல் அரிவாளால் அவரை முயன்றனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்தது. இதில், மூன்று போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி அழகுராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வனப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக அழகுராஜா தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஆயுதங்களை கைப்பற்றுவற்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென, போலீசார் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியது மட்டுமல்லாமல் அழகுராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் எஸ்.ஐ சங்கர் என்பவரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்போது மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் ரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த எஸ்.ஐ சங்கர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் அரியமங்கலம் ஊராட்சியில் உள்ள கருத்தரிவான் குக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி. அதே ஊரைச் சேர்ந்தவர் வி.கே. குருசாமி. இவரும் நெருங்கிய உறவினர். இருவரும், 40 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் தனித்தனியாக குடியேறினர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 23 ஆண்டுகளாக 21 கொலைகள் பழிக்கு பழியாக இரு தரப்பிலும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

