MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக அரசின் 3 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழக அரசின் 3 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் மாநில அரசுக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பாக நீடித்த மோதல் தணிந்து வருவதாகக் கருதப்படுகிறது. 18 மசோதாக்களில், முதலில் 9 மசோதாக்களுக்கும், தற்போது மேலும் 3 முக்கிய மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

1 Min read
Author : SG Balan
Published : Nov 13 2025, 08:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஆளுநர் vs மாநில அரசு
Image Credit : our own

ஆளுநர் vs மாநில அரசு

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பாக நீடித்து வந்த மோதல் போக்கு தற்போது தணிந்து வருவதாகக் கருதப்படுகிறது.

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவதாக அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

23
18 சட்ட மசோதாக்கள்
Image Credit : our own

18 சட்ட மசோதாக்கள்

இதனிடையே, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில், மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாத இறுதியில் ஒப்புதல் அளித்திருந்தார்.

Related Articles

Related image1
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதமா? ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு விளக்கம்!
Related image2
ஓகே சொன்ன ஆளுநர்! தமிழக அரசின் 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆர்.என்.ரவி!
33
மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல்
Image Credit : our own

மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல்

இந்நிலையில், தற்போது மேலும் 3 முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் உள்ளாட்சி அமைப்பு சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா, தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட மசோதா ஆகியவற்றுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி படிப்படியாக ஒப்புதல் அளித்து வருகிறார். இதனால், ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே நடந்து வந்த மோதல் போக்கு மாறி இருப்பதன் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தோழர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
Recommended image2
1.5 லட்சம் பேர் கலந்த திருமணம்.. 6 முறை ஆட்சி செய்த இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் மறுபக்கங்கள்
Recommended image3
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோட் செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதமா? ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு விளக்கம்!
Recommended image2
ஓகே சொன்ன ஆளுநர்! தமிழக அரசின் 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆர்.என்.ரவி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved