மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது? வெளியானது முழு அட்டவணை!
ஃபெஞ்சால் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளின் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Northeast Monsoon
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஃபெஞ்சால் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள், விவசாய பயிர்கள் மூழ்கியது. பல்வேறு பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
Half yearly Exam postponed
இதனையடுத்து விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் அரையாண்டு விடுமுறையில் மாற்றம் ஏற்படுமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாவட்டங்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
School Education Department
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணை:
அதன்படி, 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6 முதல் 9ம் வகுப்பு வரைக்கும் 02ம் தேதி (வியாழக் கிழமை) தமிழ், 03ம் தேதி (வெள்ளி கிழமை) விருப்ப மொழி, 06ம் தேதி (திங்கள் கிழமை) ஆங்கிலம், 07ம் தேதி (செவ்வாய்கிழமை) கணிதம், 08ம் தேதி (புதன்கிழமை) உடற்கல்வி, 09ம் தேதி (வியாழன்கிழமை) அறிவியல், 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது. இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.
School Student
10ம் வகுப்பு அட்டவணை
10ம் வகுப்புக்கு 02ம் தேதி (வியாழக் கிழமை) தமிழ், 03ம் தேதி (வெள்ளி கிழமை) விருப்ப மொழி, 06ம் தேதி (திங்கள் கிழமை) ஆங்கிலம், 08ம் தேதி (செவ்வாய் கிழமை) கணிதம், 09ம் தேதி (வியாழன்கிழமை) அறிவியல், 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9.55 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
Half yearly Exam
11ம் வகுப்பு அட்டவணை:
பிளஸ்-1 வகுப்புக்கு 02ம் தேதி தமிழ், 03ம் தேதி ஆங்கிலம், 06ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்) ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 07ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம். 08ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், 09ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், 10ம் தேதி கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங். இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.45 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.
Half yearly Exam Table
12ம் வகுப்பு அட்டவணை:
12ம் வகுப்புக்கு 02ம் தேதி தமிழ், 03ம் தேதி ஆங்கிலம், 06ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பாடங்கள். 07ம் தேதி கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங், 08ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பேசிக் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம். 09ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 10ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் தேர்வும் நடக்க உள்ளது. இந்த தேர்வுகள் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.