- Home
- Tamil Nadu News
- ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து.! வெளியான முக்கிய அறிவிப்பு- காரணம் என்ன.?
ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து.! வெளியான முக்கிய அறிவிப்பு- காரணம் என்ன.?
ராமேஸ்வரத்தில் ராமநவமியையொட்டி பக்தர்கள் குவிந்துள்ளதால் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வருகையையொட்டி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Rameswaram temple visit : ராமேஸ்வரம் முக்கிய ஆன்மிக தலமாக விளங்குகிறது. இங்கு ராமநாதசுவாமி கோயில், ராமர் பாதம் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை சுற்றிப்பார்க்கவே பல மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இன்று ராமநவமி தினத்தையொட்டி வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் பக்தர்களுக்கு கோயிலில் தரிசனம் செய்ய இன்று கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ளது.
Pamban Bridge
பாம்பன் பாலம் திறப்பு விழா
அந்த வகையில் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர்களில் இருந்து பேருந்துகள் மூலம் ராமேஸ்வரம் வர திட்டமிட்டவர்களும் மண்டபத்திற்கு முன்பாகவே நிறுத்தப்படவுள்ளனர். பிரதமர் மோடி ராமேஸ்வரம் பயணத்தின் காரணமாக பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க வருகை தரவுள்ளார்.
PM Modi Rameswaram visit
ராமேஸ்வரம் வரும் மோடி
இதன் தொடர்ந்து ராம நவமியை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி மதியம் 12:45 மணி அளவில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அடுத்ததாக ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதன் காரணமாக இன்று காலை 8 மணி முதல் ஒரு மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Pamban bridge opening
பக்தர்களுக்கு கட்டுப்பாடு
இந்தநிலையில் இன்று காலை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் ராமநாதசாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் கோபுரத்தை பார்த்தபடி கோயில் வெளியே நின்று தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.