- Home
- Tamil Nadu News
- ராமேஸ்வரம்-தாம்பரம் புதிய ரயில் இன்று முதல் இயக்கம்! புறப்படும் நேரம்? எந்த வழியாக செல்கிறது?
ராமேஸ்வரம்-தாம்பரம் புதிய ரயில் இன்று முதல் இயக்கம்! புறப்படும் நேரம்? எந்த வழியாக செல்கிறது?
ராமேஸ்வரம்-தாம்பரம் இடையிலான புதிய 'பாம்பன்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலின் அட்டவணை உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Rameswaram-Tambaram New Express Train: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டதால் கடந்த 2020ம் ஆண்டு முதல் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு கடல் காற்று மற்றும் சவாலான வானிலைக்கு மத்தியில் பணிகள் முடிவடைந்தன. இந்நிலையில், இந்த புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் திறந்து வைக்கிறார்.
Rameswaram-Tambaram New Express Train
இலங்கையில் இருந்து நேரடியாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். மேலும் ராமேஸ்வரம் தாம்பரம் இடையிலான புதிய பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாகவும், தினமும் இரவு 7.15 மணிக்கு இயக்கப்டும் மற்றொரு ரயில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாகவும் ராமேஸ்வரம் செல்கின்றன.
பாம்பன் பாலம் திறப்பு முதல் ராமேஸ்வரம் கோவில் தரிசனம் வரை! பிரதமர் மோடியின் பயண விவரம் இதோ!
Pampan Express
தமிழ்நாட்டினர் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்வதால், சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கைக்கு செவிமடுத்த ரயில்வே அமைச்சகம் ராமேஸ்வரம் தாம்ப்ரம் இடையே புதிய ரயில் இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.
தாம்பரம் ராமேஸ்வரம் இடையேயான 'பாம்பன்' எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து தினமும் மாலை 6.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திரிப்பாதிபுலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக சென்று ராமேஸ்வரத்துக்கு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு சென்றடையும்.
Indian Railway
மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், மேற்கண்ட ஊர்கள் வழியாக சென்று தாம்பரத்துக்கு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலில் முன்பதில்லாத கட்டணம் ரூ.190 ஆகும். இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கட்டணமாக ரூ.350 வசூலிக்கப்படும். மேலும் மூன்றடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க 950 ரூபாயும், இரண்டடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க 1,355 ரூபாயும், முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிக்க் 2,255 ரூபாயும் வசூலிக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கு 5 வசதிகள் வழங்கும் ரயில்வே.. மிஸ் பண்ணாதீங்க!