- Home
- Tamil Nadu News
- திமுக கூட்டணிக்கு மன்றாடும் ராமதாஸ்...! ஸ்டாலினுக்கு திருமா இறுதி எச்சரிக்கை..! விரட்டியடிக்கும் விசிக..!
திமுக கூட்டணிக்கு மன்றாடும் ராமதாஸ்...! ஸ்டாலினுக்கு திருமா இறுதி எச்சரிக்கை..! விரட்டியடிக்கும் விசிக..!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எங்களுடன் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு மேலாக எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது?

திமுக தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்
பாமக டாக்டர் ராமதாஸ் ஒரு அணி, அன்புமணி ஒரு அணி என்றான பிறகு டாக்டர் அன்புமணி அணி சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டார். கடந்த 23ஆம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்திலும் அன்புமணி கலந்து கொண்டு மிகக் கடுமையாக திமுக அரசை தாக்கி பேசினார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் அணி எந்த கூட்டணியில் சேரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என டாக்டர் ராமதாஸ் பாராட்டி பேசினார். அவர் திமுக கூட்டணிக்கு வருவதற்கு தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். திருமாவளவன் பெங்களூர் இன்ஸ்டியூட் மருத்துவ நிலையத்தில் சிறப்பு சிகிச்சை எடுப்பதற்காக சென்றிருந்தார். இந்நிலையில் செய்தியாளரிடம் பேசும் போது பாமக, முக கூட்டணிக்கு வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கும்போது ‘ ‘பாமக இரண்டு பிரிவாக இருக்கிறது. ஒரு பிரிவு மோடியிடம் சென்று விட்டது. இன்னொரு பிரிவு ஒருவேளை திமுக கூட்டணிக்கு வர வேண்டுமா? இல்லையா? என்பதை திமுக தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.
தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டால்
அப்படி வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டபோது, ‘‘பாமகவும், பாஜகவும் இருக்கும் அணியில் இடம்பெறுவதில்லை என்று நாங்கள் இன்று, நேற்று எடுத்த முடிவல்ல. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாங்கள் எடுத்துவிட்ட நிலைப்பாடு அது’’ என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அதே நேரம் கடந்த 20ஆம் தேதியிலிருந்து சில நாட்கள் சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்தது. அந்த சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியேயும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருமாவளவனை தொடர்ந்து தொடர்பு கொண்டு சமாதானப்படுத்துவதற்கு பலத்த முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதாவது டாக்டர் ராமதாஸ் சார்பில் திமுகவிடம் இது பற்றி கேட்கப்பட்டு இருக்கிறது. அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எங்களுடன் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு மேலாக எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது? நீங்கள் விசிக தலைவர் திருமாவளவனிடம் பேசி விட்டு வாருங்கள். அவர் ஒத்துக்கொண்டால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்’’ என்று திமுக சார்பில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சார்பில் திருமாவளவனை தொடர்பு கொள்ள கடந்த ஒரு வாரமாக பலத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. சட்டமன்றத்தில் பாமகவின் சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற கட்சி தலைவர் சிந்தனைச் செல்வனிடம், ‘‘உங்கள் தலைவர் திருமாவிடம் பேச முயற்சி செய்தோம். முடியவில்லை. நீங்கள் பேசுவீர்களா? நீங்கள் அவரிடம் பேசினால், நாங்கள் பேச விரும்புவதாக கூறுங்கள். அவரிடம் பேசி ஆகணும். டாக்டர் ராமதாஸ் எங்களை திருமாவிடம் பேசச்சொல்லி இருக்கிறார்’’ ஜி.கே.மணி, சிந்தனைச் செல்வனிடம் கோரிக்கையை வைத்திருக்கிறார்.
ராமதாஸுக்கு திமுகவிற்குள்ளும் எதிர்ப்பு
இதேபோல ஏற்கனவே சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தபோது அமைச்சர் நேருவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார் பாமக எம்.எல்.ஏ அருள். அந்த அடிப்படையில் அவரும் அமைச்சர் நேருவிடம், உங்கள் தலைவரிடம் எப்படியாவது சொல்லுங்கள். டாக்டர் ஐயா திமுக கூட்டணிக்கு வர விரும்புகிறார் என்று அமைச்சர் நேருவிடம் வலியுறுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்ல, பாட்டாளி மக்கள் கட்சியை இப்போது நம்மோடு இணைத்தால் அது எப்படி இருக்கும் என்று வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், நீர்வளத்துறை அமைச்சர், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், போக்குவரத்து, மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என மூன்று அமைச்சர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் மட்டுமே ‘‘அவர்கள் நம்மோடு வரலாம். ஏனென்றால் ராமதாஸுக்கு பாமகவில் ஒரு அனுதாபம் இருக்கிறது. அதனால் அந்த அந்த அனுதாபத்தை நாம் பயன்படுத்தலாம்’’ என்று முதலமைச்சரிடம் சொல்லி இருக்கிறார். அதேவேளை மற்ற இரு அமைச்சர்களும் ஸ்டாலினிடம், ‘‘கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஓட்டுகளும் சரி, மற்ற பொதுவான எந்த கட்சியும் சாராத பட்டியல் சமுதாய ஓட்டுளும் சரி, திமுகவுக்கு அதிகமாக வந்திருக்கின்றன. பாமகவை இணைக்கும் முடிவை நாம் எடுத்தோம் என்றால் எந்த கட்சியும் சாராத பட்டியல் சமுதாயவாக்குகள் திமுகவுக்கு வருவது சற்று குறைந்துவிடும். ஏனென்றால், விசிக கட்சித் தொண்டர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
திருமாவின் ஃபைனல் வார்னிங்
நாம் அவர்களோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் வேலை பார்த்து இருக்கிறோம். அதனால் டாக்டர் ராமதாஸ் இந்த அணிக்கு வந்தால் அந்த ரசாயன மாற்றம் ஏற்படாது’’ என்று தங்கள் கருத்தை முதலமைச்சரிடம் சொல்லி இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி முதலமைச்சர் ஸ்டாலினிடம் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இருக்கிறார். அப்போது அவரும் இந்த விஷயத்தை நேரடியாகவே அவரிடம் முதலமைச்சரிடம் சொல்லிவிட்டார். ‘‘முடிவு ரொம்ப வருஷம் முன்னாடி எடுத்தது. உங்களுக்கு பாமக வந்தால் லாபம் கிடைக்கும் என்றால் டாக்டர் ராமதாஸை கூட்டணிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். ஆனால், நாங்கள் இருக்க மாட்டோம் என்பதை திருமாவளவன் மிகத் தெளிவாக சொல்லிவிட்டார் என்று மேல்மட்ட வட்டாரங்களில் நம்மிடம் உறுதியாக சொல்கிறார்கள்.
