MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Love TN.! 36 மாதம் திமுக ஆட்சி.? ரீல்ஸ் போடுங்க பரிசை வெல்லுங்க- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!!

Love TN.! 36 மாதம் திமுக ஆட்சி.? ரீல்ஸ் போடுங்க பரிசை வெல்லுங்க- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!!

தமிழக திமுக அரசின் 36 மாத செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறை 'LoveTN' என்ற பெயரில் பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. இந்தப் போட்டிகள் ரீல்ஸ், புகைப்படம், வினாடி வினா, ஓவியம், செய்தி நறுக்குதல் மற்றும் ஹாஷ்டேக் என பல பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.

2 Min read
Ajmal Khan
Published : Feb 07 2025, 07:55 AM IST| Updated : Feb 07 2025, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Love TN.! 36 மாதம் திமுக ஆட்சி.? ரீல்ஸ் போடுங்க.. பரிசை வெல்லுங்க

Love TN.! 36 மாதம் திமுக ஆட்சி.? ரீல்ஸ் போடுங்க.. பரிசை வெல்லுங்க

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து 4 வருடங்கள் முடிவடையவுள்ளது. 5ஆம் வருடத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இந்த கால கட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் 36 மாத கால திமுக ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக போட்டிகளை நடத்தவுள்ளது தமிழக அரசின் செய்தித்துறை, இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,  

விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டங்களால் பயன் பெற்ற மக்களின் அன்பையும், மனநிலையையும் அறியும் விதமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் லவ் டிஎன்(LoveTN) என்ற தலைப்பில் பல்வேறு(X, Instagram, Facebook, WhatsApp, YouTube) போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

26
36 மாத கால திமுக ஆட்சி

36 மாத கால திமுக ஆட்சி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வீதம் 1 கோடியே 15 லட்சம் மகளிர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்க்கையை வளம் மிக்கதாக மாற்றியமைத்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை யூனோஸ்கோ பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் அயல்நாடான கனடா இத்திட்டத்தினை பின்பற்றி வருவது தமிழ்நாட்டிற்கே பெருமைக்குரியது.கலைஞர் கனவு இல்லத் திட்டம் ஏழை மக்களின் வாழ்க்கையை முழுமை செய்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர், 

36
திமுக அரசின் திட்டங்கள்

திமுக அரசின் திட்டங்கள்

தடையின்றி உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000/-வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் ரூ.1000/- பெற்று பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களைக் கல்வியாளர்கள் புரட்சிகரமானத் திட்டம் என்று போற்றுகின்றனர். விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் இப்படியாகத் தொடரும், நல்ல பல திட்டங்களின் செயல்பாடுகளால் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

46
ரீல்ஸ், புகைப்பட போட்டி, வினாடி வினா போட்டி

ரீல்ஸ், புகைப்பட போட்டி, வினாடி வினா போட்டி

கடந்த 38 மாதங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் சிறப்பு மற்றும் பயன் குறித்து அறியும் விதமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் லவ் டிஎன் (LoveTN) என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளதன. அதன்படி ரீல்ஸ் (Reels). புகைப்படப்போட்டி (Photography), வினாடி-வினாப் போட்டி (Quiz). ஓவியப்போட்டி (Painting/Drawing), செய்தி நறுக்குதல் போட்டி (Newpaper/Artical cutting), ஹாஷ் டாக் போட்டி (# hashtag) என்று 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தவுள்ளது.

56
போட்டிகளும்- அதன் விதிமுறைகளும்

போட்டிகளும்- அதன் விதிமுறைகளும்

போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு இல்லை

ரீல்ஸ் போட்டி (Reels) 1 நிமிடம்

தமிழ்நாடு அரசின் 38 மாத கால ஆட்சியின் சிறப்புகளைப் பற்றியதாக இருக்க வேண்டும். பல்வேறு திட்டங்களின் சாதனைகள், அதனால் பயனாளிகள் அடைந்துள்ள மாற்றங்கள் குறித்து விவரிக்க வேண்டும்.

ரீல்ஸ் 1 நிமிடத்துக்குள் அமைய வேண்டும்

வீடியோ மற்றும் ஆடியோ சரியான முறையில் தரத்துடன் இருக்க வேண்டும்.

(Photography)

தமிழ்நாடு அரசின் 38 மாத கால ஆட்சியின் சிறப்பான திட்டங்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

திட்டங்களின் சாதனைகள், செயல்பாடுகள் குறித்து கதையம்சத்துடன் புகைப்படங்கள் அமைதல் வேண்டும்.

66
வினாடி வினாப் போட்டி (Quiz)

வினாடி வினாப் போட்டி (Quiz)

TNDIPRயின், முகநூல்,(facebook) இன்ஸ்டாகிராம்,(instagram) X தளம், புலனம்( வாட்ஸ் ஆப்) ஆகியவற்றில் 07-02-2025 முதல் 14-02-2025 வரை 7 நாட்கள் வெளியிடப்படும் போஸ்டர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

14-02-2025 அன்று மேற்கண்ட TNDIPRயின் சமூக வலைக் கணக்குகளில் வினாடி வினாப் போட்டிக்கு அனுப்பும் URL link பயன்படுத்தி போட்டியாளர்கள் பதில் அனுப்ப வேண்டும்.

14-02-2025 முதல் 28-02-2025 வரை போட்டியாளர்கள் பதில்களை பதிவேற்றம் செய்யலாம்.

(Drawing)

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த ஓவியங்கள் அமைதல் வேண்டும். ஒவியங்களை தெளிவான முறையில் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். மேற்கண்டவாறு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்ற போட்டியாளர்கள் மேலும் tndiprmhlovetn@gmail.com மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
மகளிர் உரிமைத் தொகை
அரசியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved