- Home
- Tamil Nadu News
- Tomato And Onion Price : குவியல் குவியலாக தக்காளி, வெங்காயம்.! பை நிறைய அள்ளும் மக்கள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
Tomato And Onion Price : குவியல் குவியலாக தக்காளி, வெங்காயம்.! பை நிறைய அள்ளும் மக்கள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
காய்கறிகள் நம் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. சமீபத்திய விலை சரிவு, குறிப்பாக தக்காளி மற்றும் வெங்காயம், பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

சமையலும் காய்கறிகளும்
சமையலில் காய்கறிகளின் பங்கு மிக முக்கியமானது. அவை உணவின் சுவை, ஊட்டச்சத்து, மற்றும் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பயனளிக்கின்றன. காய்கறிகள் குறைந்த கலோரி கொண்டவை, ஆனால் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகின்றன.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த காய்கறிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன மற்றும் புற்றுநோய், இதய நோய்கள் போன்றவற்றைத் தடுக்க உதவுகின்றன. காய்கறிகளைப் பயன்படுத்தி பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன, கறி, சூப், சாலட், பொரியல், சாம்பார், மற்றும் பருப்பு போன்றவைகளை இல்லத்தரசிகள் தயாரிக்கிறார்கள்.
சமையலில் தக்காளி, வெங்காயம்
குறிப்பாக காய்கறி சந்தையில் மக்கள் எந்த காய்கறிகள் வாங்குகிறார்களோ இல்லையோ தக்காளி மற்றும் வெங்காயத்தை பை நிறைய வாங்குகிறார்கள். ரசம் முதல் பிரியாணி சமைப்பது வரை அனைத்திற்கும் முக்கிய தேவையாக தக்காளி மற்றும் வெங்காயம் உள்ளது. அந்த வகையில் இந்த இரண்டு காய்கறிகளின் விலை உயர்ந்தால் அவ்வளவு தான். நடுத்தர வர்க்க மக்களின் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும்.
எனவே குறைந்த அளவு மட்டுமே தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்குவார்கள். எனவே எப்போது விலை குறையும் என மக்கள் காத்திருப்பார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்உ முன்பாக ஒரு கிலோ தக்காளி வரலாற்றில் இல்லாத வகையில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தற்போதோ ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஏறி இறங்கும் தக்காளி வெங்காயம் விலை
இதே போல வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் தக்காளிக்கு போட்டியாக 100 முதல் 150 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிப்பு மற்றும் வரத்தின் காரணமாக விலையானது வெகுவாக குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவு காய்கறிகளை பை நிறைய வாங்கி செல்கிறார்கள்.
இதனிடையே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சந்தையில் சற்று உயர்ந்தாலும், விவசாயிகளுக்கு குறைந்த விலையே கிடைக்கிறது. உதாரணமாக, பொள்ளாச்சியில் தக்காளி ரூ.12-16 என்ற விலையில் விற்கப்படுவது விவசாயிகளுக்கு செலவை ஈடுகட்ட போதுமானதாக இல்லையென கூறப்படுகிறது.
கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலைகள் சந்தை வரத்து மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களுடன் மாறி மாறி வருகிறது. காய்கறிகளின் வரத்து அதிகரித்ததால் பல காய்கறிகளின் விலைகள் சரிந்துள்ளன, இது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 18 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 70 ரூபாய்க்கும்,
தக்காளி ஒரு கிலோ தரத்தை பொறுத்து 12 ரூபாயிலிருந்து 20 ரூகாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சற்று குறைந்த காய்கறி விலை
பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் கொத்தவரை ஒரு கிலோ 80 முதல் 140 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,
பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது