ஆட்சியை பிடிக்க பிரஷாந்த் கிஷோருக்கு ரூ.100 கோடியை அள்ளி கொடுத்ததா திமுக?
அண்மையில் புதிதாக கட்சி தொடங்கிய தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தனது சம்பள விவரத்தை வெளியிட்டு உள்ளார்.
Prashant Kishor
பீகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பிராஷாந்த் கிஷோர் மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி அக்கட்சி வெற்றி பெறுவதற்கான பணிகளை செய்து வருகிறார். அதன்படி குறிப்பிட்ட கட்சிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் பட்சத்தில் தேர்தலுக்கு முன்னதாக அக்கட்சிக்கு பிரசார வியூகங்களை வழங்குவது, தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்குவார்.
mk stalin
அந்த வகையில் இவர் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல்களில் பணியாற்றி உள்ளார். மேலும் பல தேர்தல்களில் இவர் பணியாற்றிய கட்சிகள் வெற்றியையும் பெற்றுள்ளன. இந்நிலையில் பிரஷாந்த் கிஷோர் தற்போது தனது சொந்த மாநிலத்தில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். பிகாரில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இவரது கட்சி போட்டி போடுகிறது.
Udhayanidhi Stalin
இந்நிலையில், இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் வியூகவாதியாக தனது சம்பளத்தை பிரஷாந்த் கிஷோர் வெளிப்படுத்தி உள்ளார். பெலகஞ்சில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், அவர் பேசியதாவது, என்னுடைய பிரசாரத்திற்கு கூடாரங்கள் மற்றும் நிழற்குடைகள் அமைக்க என்னிடம் பணம் இருக்காது என்று நினைக்கிறீர்களா?
Udhayanidhi Stalin
நான் பலவீனமானவன் என்று நினைக்காதீர்கள். தேர்தலுக்கு ஒரு கட்சிக்கு ஆலோசனை வழங்க எனக்கு கிடைக்கும் சம்பளம் குறித்து நீங்கள் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள். ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு கூறினால் எனது கட்டணம் ரூ.100 கோடி. ஒரே ஒரு தேர்தலுக்கு நான் ஆலோசனை வழங்கினால் எனது பிரசாரத்திற்கு செலவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு தேர்தலுக்கு பணியாற்ற ரூ.100 கோடி கட்டணம் வசூலித்ததாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ள நிலையில், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக.வுக்கு சாதகமாக பணியாற்றிய பிரஷாந்த் கிஷோருக்கு திமுக.வும் ரூ.100 கோடியை வழங்கியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.