- Home
- Tamil Nadu News
- மாதத்தின் முதல் நாளே பொதுமக்களுக்கு அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
மாதத்தின் முதல் நாளே பொதுமக்களுக்கு அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Power Shutdown: தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்யவும், சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை, திருப்பூர் பகுதிகளில் மின்தடை.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்தேவை
நமது முன்னோர்கள் காலத்தில் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்த காலம் போய் தற்போது சிறிது நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியவதில்லை. தவிர்க்க முடியாத சூழல் காரணமாக கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் என பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்தேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
எந்தெந்த பகுதிகளில் மின்தடை
இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மற்றும் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள வசதியாக முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி டிசம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
கோவை
முத்துகவுண்டன் புதூர் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த நீலாம்பூர், அண்ணாநகர், லட்சுமிநகர், குளத்தூர், முத்துகவுண்டன் புதூர் ரோடு, குரும்பபாளையம், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திருப்பூர்
கருவலுார், அரசப்பம்பாளையம், நயினாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதுார், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம் பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம். தீபாலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

