மஞ்சள் பையோட ரெடியா இருங்க மக்களே: பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் விநியோகம்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பு நாளை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
pongal gift
தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை ஒவ்வொருவரும் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழும் குடும்பத்தினருக்ம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்கான டோக்கன் கடந்த 3ம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. டோக்கன்களின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பு தமிழகம் முழுவதும் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட உள்ளன.
நாளைத் தொடங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகமானது வருகின்ற 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு முடிவடையும் வரை வழக்கமாக வழங்கப்படும் இலவச அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படாது என்றும், பொங்கல் பண்டிகை முடிவடைந்தப் பின்னர் வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.