ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க காத்திருந்த பிரபல ரவுடி.! துப்பாக்கியால் சுட்டபோலீஸ்- யார் இந்த பாம் சரவணன்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் தென்னரசு கொலைக்குப் பழிவாங்கும் விதமாக சரவணன் தொடர் கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க காத்திருந்த பாம் சரவணனை போலீசார் கைது செய்தனர்.
Armstrong
சென்னையில் பழிக்கு பழி வாங்க தொடர் கொலை சம்பவங்கள் அரங்கேறியது. இதனை தடுக்கும் வகையில் சென்னையை மட்டுமல்ல பல்வேறு மாவட்டங்களை கலக்கி வந்த ரவுடிக்கள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரபல ரவுடி பாம் சரவணனை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலை யார் இந்த பாம் சரவணன் என்பதை தற்போது பார்க்கலாம், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தவர் தென்னரசு,
Armstrong
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டில் உறவினர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பும் போது தென்னரசுவின் மனைவி மைதிலி, தாய் சகுந்தலா ஆகியோர் முன்னிலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தென்னரசுவின் தம்பி தான் பாம் சரவணன், தனது அண்ணன் கொலைக்கு பழிவாங்க அடுத்தடுத்து கொலை சம்பவங்களை அரங்கேற்றினார். அந்த வகையில் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கிலும் பாம் சரவணன் ஆதவாளர்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து தான் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் வகையில்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அயனாவரம் அருகே புதிதாக கட்டி வரும் வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலைக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர் பாம் சரவணன் திட்டமிட்டு வருவதாக அலர்ட் செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஆந்திரா அருகே பாம் சரவணன் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் பாம் சரவணன் கைது செய்துள்ளனர். பாம் சரவணன் மீது 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. வெடி குண்டை சரியாக திட்டமிட்டு எரிவதால் பாம் சரவணன் என பட்டப் பெயர் சூட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் நேற்று ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதப்பாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த பாம் சரவணனை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Armstrong Murder
சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பாம் சரவணன் காரில் இருந்த உதவி ஆய்வாளரை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளான். இதனையடுத்து போலீசார் பாம் சரவணனின் காலில் சுட்டு பிடித்தனர். பாம் சரவணனிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு பட்டாகத்தி மற்றும் 5 கஞ்சா பண்டல்கள் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.