MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தன்னை கொலை செய்ய சதி மதுரை ஆதீனம்.! வெளியான உண்மை- ஓட்டுநரை தட்டித்தூக்கும் போலீஸ்

தன்னை கொலை செய்ய சதி மதுரை ஆதீனம்.! வெளியான உண்மை- ஓட்டுநரை தட்டித்தூக்கும் போலீஸ்

மதுரை ஆதீனம் சென்னை செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டையில் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக குற்றம் சாட்டினார். விபத்துக்குள்ளான காரில் இஸ்லாமியர்கள் இருந்ததாகவும், பாகிஸ்தான் சதி செய்ததாகவும் கூறினார். ஆனால் போலீஸ் விசாரணையில், ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : May 05 2025, 11:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மதுரை ஆதினம்  கொலை செய்ய சதி

மதுரை ஆதினம்- கொலை செய்ய சதி

மதுரை ஆதீனமாக 293-ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் உள்ளார். இவர் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மதுரையில் இருந்து சென்னை வந்தார்.

அப்போது அந்த நிகழ்வில் பேசிய மதுரை ஆதினம்,  உளுந்தூர்பேட்டை அருகே என்னை கொலை செய்ய சதி செய்து விட்டதாக பாஜக மூத்த தலைவர் நட்டா முன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக குற்றம்சாட்டினார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இடித்த காரில் இஸ்ஸாமியர்கள் - மதுரை ஆதினம்

இடித்த காரில் இஸ்ஸாமியர்கள் - மதுரை ஆதினம்


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரப் பெருமாள் தன்னை அந்த நேரத்தில் என்னை காப்பாற்றியதாக கூறினார். இது மட்டுமில்லாமல் தான வந்த காரை இடித்த காரில் இஸ்ஸாமியர் வெள்ளை உடை அணிந்து இருவர் இருந்ததாக கூறினார். இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் மதுரை ஆதீனம் குற்றம் சாட்டினார்.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றப்பட்டது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "02.05.2025 தேதி காலை மதுரை ஆதினம்சென்னைக்கு -TN 64 U 4005 Fortuner என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

34
மதுரை ஆதினம் கார் விபத்து- போலீசார் விளக்கம்

மதுரை ஆதினம் கார் விபத்து- போலீசார் விளக்கம்

அந்த கார்  அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்லவில்லை. அதற்கு பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக சென்றது. அப்போது காலை 9.45 மணிக்கு சேலம்- சென்னை நோக்கி சென்ற மாருதி கார் ரவுன்டானா அருகே மெதுவாக கடந்தது. அப்போது மதுரை ஆதீனம் காரின் பக்கவாட்டில் அந்த கார் உரசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில்  இரு கார்களும் லேசான சேதமடைந்தன. இந்த சம்பவத்தில்  இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டுவிட்டனர். முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் இல்லையென தெரிவிக்கப்பட்டது.

44
கார் விபத்து - வெளியான சிசிடிவி

கார் விபத்து - வெளியான சிசிடிவி

மேலும்  ஆதீனம் பயணம் செய்த கார் டிரைவரின் கவனக்குறைவாலேயே விபத்து நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டது. அதில் வேகமான வரும் கார் மற்றொரு காரின் பின் பகுதியில் மோதியது தெரியவருகிறது. மேலும் இரண்டு கார்களும் நிறுத்தப்பட்டுள்ள காட்சியும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் செல்வம் மீது போலீசார்  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை ஆதீனம் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே  முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
மதுரை
குற்றம்
காவல்
விபத்து
பிஜேபி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
Recommended image2
Now Playing
தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
Recommended image3
Now Playing
வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
Related Stories
Recommended image1
அந்த பெருமையை மோடி கிட்ட அடகு வச்சு ஆதின மரபுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாதீர்.. மதுரை ஆதீனத்தை விளாசிய ஜோதிமணி.!
Recommended image2
என்னை கொலை செய்ய சதி! மீனாட்சி சுந்தரேச பெருமாள் தான் என்னைக் காப்பாற்றினார்! மதுரை ஆதினம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved