MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வரதட்சனை தராவிட்டால் நிர்வாண வீடியோ வெளியிடுவோம்..? இதெல்லாம் பொய் புகார்- பாமக எம்எல்ஏ சதாசிவம் விளக்கம்

வரதட்சனை தராவிட்டால் நிர்வாண வீடியோ வெளியிடுவோம்..? இதெல்லாம் பொய் புகார்- பாமக எம்எல்ஏ சதாசிவம் விளக்கம்

நான் வரதட்சணை கேட்கும் ஆள் கிடையாது, வரதட்சணை கொடுக்கக் கூடிய ஆள் எனவே வரதட்சணை நாங்கள் கேட்கவும் இல்லை. அவர்கள் கொடுக்கவும் இல்லையென பாமக எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 23 2023, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
pmk

pmk

பாமக எம்எல்ஏ மீது புகார்

வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரையடுத்து பாமக எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி, மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் கொடுத்த மனோலியாவின் தந்தை முருகேஷன் கூறுகையில்,

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த எனது மகள் மனோலியாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு 500 பவுன் நகை கேட்ட நிலையில் 200 சவரன் நகையை கொடுத்தோம். மேலும் 45 லட்சம் மதிப்புள்ள கார் எம்எல்ஏ வீட்டில் இருந்து கேட்டுள்ளனர். ஆனால் தன்னால் முடியாது என மறுத்ததாகவும், இதனையடுத்து தன்னால் முடிந்த 25 லட்சம் மதிப்புள்ள கார் மட்டும் வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
salem

salem

வரதட்சனை கேட்டு கொடுமை

மேலும் 19 லட்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்களும் திருமணத்திற்காக வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார். திருமணம் முடிந்து அடுத்த ஒரு சில மாதங்களிலேயே மீண்டும் 50 சவரன் நகை கேட்ட நிலையில் மீண்டும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு நகை கொடுத்ததாக கூறினார். இந்த சூழ்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு சதாசிவம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிலையில் ஒரு கோடி ரூபாய் கடனாக கொடுத்தாதகவும்,

30 லட்சம் ரூபாய் தேர்தல் செலவுக்கு அன்பளிப்பாக கொடுத்தாகவும் முருகேஷன் தெரிவித்தார். இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் மீண்டும் வரதட்சனை கேட்டதால் தனது மகள் மனோலியா சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். 
 

34
salem

salem

வரதட்சனை கேட்கவில்லை

தொடர்ந்து கூறிய அவர், தனது மகள் உடை இல்லாத வீடியோவை எடுத்து வைத்து எம்எல்ஏ வீட்டார் மிரட்டுவதாகவும் புகாரில் கூறியுள்ளதாக தெரிவித்தார். இந்தநிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த பாமக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம்,   நான் வரதட்சணை கேட்கும் ஆள் கிடையாது, வரதட்சணை கொடுக்கக் கூடிய ஆள். வரதட்சணை நாங்கள் கேட்கவும் இல்லை. அவர்கள் கொடுக்கவும் இல்லையென கூறியவர், இது தவறான செய்தி என தெரிவித்தார். என்னிடம் எஃப் ஐ ஆர் எதுவும் வழங்கப்படவில்லை நூறு சதவீதம் பொய் புகார். என்னுடைய மருமகளுக்கு எதுவும் தெரியாது வழக்கறிஞர் சொன்னதை மனோலியா காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.  

44
pmk

pmk

இதெல்லாம் சின்ன பிரச்சனை

என்னுடைய பெயருக்கும் பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக கூறினார். மேலும் குடும்ப சண்டை எல்லாருக்கும் உள்ளது. எம்எல்ஏ என்பது ஒரு பெரிய பதவி அதில் குடும்ப பிரச்சனையை சேர்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். நாங்கள் எல்லாம் புலி வேட்டைக்கு செல்பவர்கள். எலி வேட்டையை பார்க்க முடியாது. இதெல்லாம் சின்ன சின்ன பிரச்சனை என தெரிவித்தவர், வழக்கு விசாரணைக்கு கட்டாயம்  ஒத்துழைப்பு தருவேன் என சதாசிவம் உறுதி அளித்தார். 

இதையும் படியுங்கள்

வரதட்சணை கேட்டு என்னை கொடுமை படுத்துறாங்க.. பாமக எம்எல்ஏ குடும்பத்தினர் மீது மருமகள் பரபரப்பு புகார்.!
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
குற்றம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Onion Price: தாறு மாறா குறையப்போகும் வெங்காயம் விலை! மூட்டை மூட்டையாய் வாங்கிச்செல்ல நேரம் வந்தாச்சு.! என்ன காரணம் தெரியுமா?
Recommended image2
Sugar Hoarding Law: 100 கிலோ சர்க்கரையை வீட்டில் வைத்தால் தண்டனையா? சட்டம் என்ன சொல்கிறது?
Recommended image3
Gold Loan New Plan: தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்.! கிராமுக்கு Extra ரூ.2,000 கிடைக்க போகுது.! யாருக்கெல்லாம் பயன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved