MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மக்களே வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்! இந்த மூன்று மாவட்டம் ஊட்டி போல மாறப்போகுதாம்! சென்னை வானிலை மையம்!

மக்களே வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்! இந்த மூன்று மாவட்டம் ஊட்டி போல மாறப்போகுதாம்! சென்னை வானிலை மையம்!

தமிழ்நாட்டில் இன்று முதல் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.

2 Min read
Author : vinoth kumar
Published : Aug 07 2025, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
Image Credit : Google

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆரஞ்ச் அலர்ட்
Image Credit : our own

ஆரஞ்ச் அலர்ட்

அதேபோல் நாளை வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககன மழையும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம். கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

34
ஆகஸ்ட் 9ம் தேதி
Image Credit : our own

ஆகஸ்ட் 9ம் தேதி

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஆகஸ்ட் 10 முதல் 13ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

44
சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jason Sanjay Opens Up: அப்பா காத்திருக்கிறார்! தந்தையைப் பற்றி முதன்முதலாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்.!
Recommended image2
Now Playing
சமூக நீதி நாள்: தந்தை பெரியார் உருவப்படத்திற்கு தவெக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை!
Recommended image3
Now Playing
லண்டன் பயணத்தை நிறைவு செய்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் !
Related Stories
Recommended image1
சென்னையில் பட்டப்பகலில் அதிர்ச்சி! மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை! நடந்தது என்ன?
Recommended image2
120 சவரன், 38 லட்சம் சொகுசு கார் கொடுத்தும் வரதட்சணை டார்ச்சரால் பெண் தற்கொ**! குடும்பத்தையே அலேக்கா தூக்கிய போலீஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved