School Teacher: அக்டோபர் 30! ஈவினிங் வரை தான் டைம்! ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் வீர்கதா 4.0 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 3 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீரதீர நிகழ்வுகள் சார்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு, படைப்புகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் பள்ளிகளுக்கு இணையாகவும் அரசு பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்பட மன்றம், வானவில் மன்றம், வினாடி வினா மன்றம் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதை போன்று விளையாட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வீர்கதா 4.0 பள்ளிக்குழந்தைகளிடையே தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்க்கும் விதமாக வீரதீர நிகழ்வுகள் சார்ந்து 3 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்தி அதன் படைப்புகளை சார்ந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திடும் தேதி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொடக்க , உயர், மேல்நிலை பள்ளிகளில் 3 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வீர்கதா 4.0 போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் . இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( தனியார் பள்ளி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொக்கக்கல்வி) நிறுவாகத்திற்குட்பட்ட பள்ளிகள் இணைப்பில் உள்ள தலைப்புகளில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு சார்ந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எவ்வித பள்ளிகளும் விடுதலின்றி போட்டிகள் நடத்தி அதன் முடிவை அன்றே வீர்கதா 4.0 இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடுமாறும் அனைத்து பள்ளிகளும் 100 % பதிவேற்றம் செய்த அறிக்கையை அக்டோபர் 30ம் தேதி மாலைக்குள் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.