மீண்டும் அதிகரித்த சின்ன வெங்காயம் விலை.! உச்சத்தில் நீடிக்கும் கேரட், பீன்ஸ்-கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன?
சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் கேரட், அவரைக்காய், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
உச்சத்தில் பூண்டு விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல பூண்டின் விலையும் உச்சத்தை அடைந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு 360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அவரைக்காய் விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 16 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Vegetables Price Koyembedu
இஞ்சி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 14 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்
சர்வதேச அளவிலான சமையல் போட்டிக்கான ஒலிம்பிக்.. 124 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்