- Home
- Tamil Nadu News
- தாத்தா என்று அழைக்க வேண்டியவரை அப்பா என்று அழைக்கிறார்கள்! டிடிவி. தினகரன் கடும் விமர்சனம்!
தாத்தா என்று அழைக்க வேண்டியவரை அப்பா என்று அழைக்கிறார்கள்! டிடிவி. தினகரன் கடும் விமர்சனம்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த டிடிவி தினகரன் திமுக அரசு மத்திய அரசு இந்தியை திணிப்பதாக பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.

தாத்தா என்று அழைக்க வேண்டியவரை அப்பா என்று அழைக்கிறார்கள்! டிடிவி. தினகரன் கடும் விமர்சனம்!
சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்: பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு 1967 ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். தாய்மொழியான தமிழையும், இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருமொழிக் கொள்கை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் மூன்றாவதாக ஒரு மொழியை கொண்டுவர சட்டம் இயற்றி இருக்கிறார்கள். மும்மொழி கொள்கை வேண்டாம் என்றால் இரு மொழி கொள்கையே போதும் என்று கூறலாம்.
டிடிவி தினகரன்
தமிழ்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பெரும்பாலான அரசியல் இயக்கங்களும் இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதை செயல்படுத்துவதை விட்டுவிட்டு பத்தாயிரம் கோடி வேண்டாம் என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் வசனம் பேசுவது போல பேசி இன்றைக்கு ஆட்சியாளர்கள் மீது இருக்கின்ற மக்களின் கோபத்தை மாற்றும் விதமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தியை மத்திய அரசு திணிப்பதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி
கட்டப்பட்ட பாலம் திறந்து வைத்து மூன்று மாதங்களிலேயே இடிந்து விழுகிற அளவுக்கு முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் மீது இருப்பதால் மத்திய அரசு பார்த்து பார்த்து நிதி வழங்குகிறது என்று நினைக்கிறேன். இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு எப்படி நிதி ஒதுக்கப்படுகிறதோ அதேபோல் தான் தமிழ்நாட்டுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி
வரும் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு மீண்டும் மீண்டும் வீணா போன பழனிச்சாமி பற்றி கேள்வி கேட்காதீர்கள் என்று காட்டமாக பதில் அளித்தார். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் உறுதியாக ஒன்றிணைந்து ஓரணியில் திரண்டு 2026ம் ஆண்டு பொது தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் நாங்கள் திமுக என்ற மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் அது உறுதியாக நடக்கும்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
தினம் ஒரு கற்பழிப்பு சம்பவம், கேள்வி படாத அளவிற்கு குற்றச்சம்பவங்கள், கொலைச் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. மூளை முடுக்கெல்லாம் கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது. பள்ளிகளுக்கு அருகில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. இந்த ஆட்சியாளர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். 2026ல் கெட் அவுட் திமுக என்று தான் வரப்போகிறது அதை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். தாத்தா என்று அழைக்க வேண்டியவரை அப்பா என்று அழைக்கிறார்கள். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு என்பது வீட்டிலும் தேவைப்படும். விஜய்க்கு பாதுகாப்பு தேவை என்று அரசு நினைத்து இருக்கிறது அதனால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.